கேஎல்112 பேரணி உண்மையில் “வரலாற்றில் இன்று நிகழ்வாகும்”

rally5“நாட்டு வளங்கள் தங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டை வழங்கும் மாற்றங்களை மலேசியர்கள் விரும்புவது தெளிவாகி விட்டது. அவர்கள் பிச்சைகளை நம்பியிருக்க விரும்பவில்லை.”

“எழுச்சி” பேரணிக்கு மெர்தேக்கா அரங்கில் 100,000 பேர் கூடினர்

ஜான் பியரே: மற்ற தெரு ஆர்ப்பாட்டங்களும் அரசியல் கூட்டங்களும் பெரிய அளவில் எதிர்ப்புக் கூட்டங்களும் நடத்தப்படலாம். ஆனால் அந்த எழுச்சிப் பேரணி அவற்றுக்கு எல்லாம் சிகரமாக அமைந்து விட்டது. மலேசியாவின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்த நேரம் அது.

Guna Otak Sikit: வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். 112 (ஜனவரி 12) பேரணி உண்மையில் “வரலாற்றில் இன்று நிகழ்வாகும்”

அகமட் சார்பைனி, ஏ குகன், அமினுல்ரஷீட் அம்சா, தியோ பெங் ஹாக், அல்தான்துயா ஷாரிபு ஆகியோரது மரணங்கள்; ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி ஊழல், பாங்க் பூமிபுத்ரா, 40 மில்லியன் ரிங்கிட் சபா விவகாரம், தேசிய விலங்குக் கூட நிறுவனம் (என்எப்சி), கள்ளத்தனமாக பணம் வெளியேறியது, மக்கள் பணத்தைப் பயன்படுத்தி திருமணங்களை நடத்துவது, அம்னோ கிளை போல தேர்தல் ஆணையம் இயங்குவது, கணக்கில் அடங்காத டோல் சாவடிகள், மோசமான தரத்தைக் கொண்ட கார்கள், தானியங்கி ‘பணக்காரராகும் ஊழல்’ (ஏஇஎஸ்), நாட்டின் சொத்துக்களை ( துறைமுகங்கள், அஞ்சலகச் சேவை, நெடுஞ்சாலைகள், சாக்கடை கழிவு நீர் சேவைகள்) தனியார் மயம் மூலம் ‘கொள்ளை அடிப்பது,  தனிநபர்களைக் காப்பாற்றுவதற்குப் பெட்ரோனாஸ் பணத்தைப் பயன்படுத்தியது போன்ற பல விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

கணக்கில் அடங்காத அளவுக்கு ஊழல்கள். மக்கள் சக்தி நிலை நிறுத்தப்பட்ட நாள் அது.

கெட்டிக்கார வாக்காளர்:  அந்தப் பேரணி மக்களுடைய உணர்வுகளை பிரதிபலித்தது. இந்த நாட்டில் எல்லா இனங்களும் முதிர்ச்சி அடைந்து விட்டதையும் அது காட்டியது.

இது ஊழல் மலிந்த ஆட்சியாளர்களிடமிருந்து முற்றாக மாறுபட்டுள்ளது. அந்த ஆட்சியாளர்கள் எல்லாம் சரியாக இருக்கின்றன என்று சொல்கின்றனர். தங்களுக்குச் சொந்தமில்லாத அன்பளிப்புக்களை விநியோகம் செய்கின்றனர். மக்களை பிச்சைகளை நம்பி வாழுகின்றவர்களைப் போல நடத்துகின்றனர்.

நாட்டு வளங்கள் தங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டை வழங்கும் மாற்றங்களை மலேசியர்கள் விரும்புவது தெளிவாகி விட்டது. அவர்கள் பிச்சைகளை நம்பியிருக்க விரும்பவில்லை. அதே வேளையில் சிறிய  பிரிவினர் ஆடம்பரமாக வாழ்கின்றனர்.

நாடோடி: மாற்றம் இறுதியில் வந்து விட்டதா ? வானவில் வண்ணங்கள். அழகாக இருக்கின்றன. நான் உன்னை நேசிக்கிறேன்.

மகிழ்ச்சி: மெர்தேக்கா அரங்கில் காற்பந்துத் திடலிலும் மற்ற எல்லா இடங்களிலும் மக்கள் நிறைந்திருந்தனர். பாஸ் கட்சியின் அமால் பிரிவினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி நெருக்கடி ஏற்படாமல் தவிர்த்தனர்.

அரங்கத்துக்குள் நுழைய முடியாமல் பலர் வெளியில் நின்று கொண்டிருந்தனர். ஆகவே 100,000 என்பது குறைவான மதிப்பீடு. பத்தாயிரக்கணக்கான மக்கள் வெளியில் காணப்பட்டனர்.

நல்ல விளைவு: மலேசியா அதன் குடி மக்களுக்குச் சொந்தமானது என்பது மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. மக்களுக்காக மக்களுடைய மக்கள் அரசாங்கமே தேவை.

அரசியல்வாதிகளாக விரும்புகின்றவர்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் எஜமானர்கள் அல்ல. மக்களுடைய சேவகர்கள்.

மூன்றாவது கண்: பெர்சே 2.0, பெர்சே 3.0 ஆகியவற்றில் நான் கலந்து கொண்டேன். ஆனால் நேற்றையநிகழ்வுக்குப் போகவில்லை. பக்காத்தான் தனது கடமைகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும். பிஎன் இதுகாறும் செய்வதைப் போல மக்கள் நல்லெண்ணத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

நாங்கள் பிஎன் -னை வெறுப்பதால் பக்காத்தானை கண்மூடித்தனமாக ஆதரிப்போம் என எண்ண வேண்டாம்.

நுருல் இஸ்ஸா அன்வார், ராபிஸி இஸ்மாயில், டோனி புவா, முகமட் சாபு ஆகியோரை நான் நேசிக்கிறேன். ஆனால் அஸ்மின் அலியையும் இங்கே சகோதரர்களை நான் விரும்பவில்லை.

சுதந்திர மலேசியா: நான் பேரணியில் கலந்து கொண்டேன். பிற்பகல் ஒரு மணிக்கு நான் அரங்கத்துக்குள்நுழைந்தேன். பிற்பகல் மணி 2.30 வாக்கில் அரங்கம் நிரம்பி விட்டது.

அந்த வரலாற்று நிகழ்வில் நானும் ஒர் அங்கமாக இருந்தது குறித்துப் பெருமை கொள்கிறேன்.

மக்கள் பேசி விட்டனர். அமைதியாக கூடுவதற்கு விடுக்கப்பட்ட மக்கள் கோரிக்கைக்கு இணங்குவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழி இல்லை.

 

TAGS: