‘73,000 பிலிப்பினோக்கள் பெரிய பனிப்பாறையின் நுனியே’

sabah“73,000 பிலிப்பினோக்கள் மட்டுமே என்பதை உள்ளூர் சபா மக்கள் நம்ப வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனரா ? அத்தோடு இந்தோனிசியர்களைப் பற்றி என்ன சொல்வது ?”

பெர்ஜெயா அரசாங்கம் சபாவில் 73,000 பிலிப்பினோக்களை குடியமர்த்தியது

நம்பாதவன்: சபாவில் சில நூறாயிரம் (அல்லது மில்லியன் கணக்கில்) பேர்களுக்கு சட்ட விரோதமாக மலேசியக் குடியுரிமை கொடுக்கப்பட்டதாக சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையம் முடிவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அது குறித்து பிஎன் அரசாங்கமோ அல்லது பக்காத்தான் அரசாங்கமோ (அது ஆட்சிக்கு வந்தால்) என்ன செய்யப் போகின்றன ?

அந்த பிலிப்பினோக்களும் ( மில்லியன் கணக்கான இந்தோனிசியர்கள் ) மீண்டும் கடலில் எறிவதற்கு ஒரு கொத்து மீன்கள் அல்ல.

அந்த எம் திட்டம் (டாக்டர் மகாதீர் முகமட்டின் திட்டம் எனக் கூறப்படுகின்றது) திருத்தவே முடியாத சூழ்நிலையை நிலைத்திருக்கச் செய்து விட்டது. மனிதாபிமான அடிப்படையில் அந்த அந்நியர்கள் குடியமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என நான் நம்ப முயலுகிறேன். ஆனால் பல விஷயங்கள் அதில்   அடங்கியுள்ளன.

பிஎன் அரசாங்கம் கால வரம்பின்றி என்றென்றும் ஆட்சி புரிவதை உறுதி செய்வதே எம் திட்டத்தின் நோக்கம் என்பதை ஊரறியும். வாக்குப் பெட்டிகளில் வெற்றி பெறச் செய்யப்பட்ட “ஏமாற்று வேலையே ” அது.

இறைவன் நமது செயல்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை டாக்டர் மகாதீரும் பிஎன் அரசாங்கமும் உணரவில்லை. கேஎல்112ல் மக்கள் பேசி விட்டனர். விரைவில் வரலாறு படைக்கப்படும்.

கெலாத்தே: 73,000 மட்டுமா ? மை கார்டுகளுடன் குடியேறி விட்ட சில நூறாயிரம் அல்லது மில்லியன் கணக்கான அந்நியர்களைப் பற்றி என்ன சொல்வது ? அவர்களது மை கார்டுகள் போலியா அல்லது பணம் கொடுக்கப்பட்டதா அல்லது சலுகையாக வழங்கப்பட்டதா ?

சபாவில் இஸ்லாம் அதிகாரத்துவ சமயமாக இல்லாத போது ஏன் அவர்கள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது ?

என் கருத்து: இஸ்லாம் சபாவின் அதிகாரத்துவ சமயமாக இல்லை என்பதை அலட்சியம் செய்து விட்டு மாநில, கூட்டரசு தலைமைத்துவங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

அது சபா மக்களுக்குச் சோகமான நாள் ஆகும். அவர்கள் நம்பியவர்களே அவர்களை விற்று விட்டனர்.

பொய்களை வேரறுப்பவன்: அந்த நடவடிக்கைகள் அனைத்தும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. குடிமக்கள் அந்த விஷயத்தில் இன்று வரை இருட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

அம்னோ அரசாங்கம் விருப்பம் போல செயல்படுகிறது. மேலும் பாதகம் ஏற்படும் முன்னர் அது அகற்றப்பட வேண்டும்.

அஜிஸான்: அந்த அரச விசாரணை ஆணையம் வெறும் கண் துடைப்புத் தான். முடிவில் இப்படிக் கூறப்படும்: அனைவரும் நடைமுறைகளைப் பின்பற்றினர். தவறு ஏதும் நிகழவில்லை.

ஆகவே முடிவு எங்களுக்குத் தெரியும். அதனால் அந்த ஆணையம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கொக்கோமோமோ: அந்த மனிதர்களைக் கண்டு பிடித்து வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களை நீக்க வேண்டும்.

 ஒரே கேலிக் கூத்து: அதனால் வரும் தேர்தலில் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. அவர்களை வாக்காளர்  பட்டியலிலிருந்து நீக்குவதற்குப் போதுமான நேரம் கிடையாது.

நீலகிரி: மலேசிய பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றால் அவர்களை எங்கிருந்து வந்தார்களோ அங்கு திருப்பி அனுப்பி விட வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்_3e86: 73,000 பிலிப்பினோக்கள் மட்டுமே என்பதை உள்ளூர் சபா மக்கள் நம்ப வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனரா ? அத்தோடு இந்தோனிசியர்களைப் பற்றி என்ன சொல்வது ?

உள்ளூர் சபா மக்கள் பார்வையற்றவர்கள் அல்ல. ஒருவர் அந்நியரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்காது.

நியாயமானவன்: 73,000 பிலிப்பினோக்கள் மறைவாக உள்ள பெரிய பனிப்பாறையின் நுனியே என்று நான்கருதுகிறேன். பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் முழுமையான அரச விசாரணை ஆணையத்தை மக்கள் விரும்புவது திண்ணம்.

 

TAGS: