பாங்க் இஸ்லாம் தலைமைப் பொருளாதார நிபுணர் அஸ்ருல் அஸ்வார் அகமட் தாஜுதினை ரை இடைநீக்கம் செய்யுமாறு அந்த வங்கிக்கு பிஎன் அரசாங்கம் அரசியல் நெருக்குதல் கொடுத்திருக்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கருதுகிறார்.
அந்த வங்கிக்கு முக்கியமான தொழில் ரீதியிலான அறிக்கையை வழங்கியதற்காக தனது பொருளாதார நிபுணரை ஒரு நிதி நிறுவனம் இவ்வாறு இடைநீக்கம் செய்யாது என பொக்கோக் செனா எம்பி-யுமான அவர் சொன்னார்.
தாபோங் ஹாஜி வழியாக பாங்க் இஸ்லாம் மீது தனக்குள்ள பங்குரிமையைப் பயன்படுத்தி அரசாங்கம் அந்த அரசியல் நெருக்குதலை தொடுத்திருக்க வேண்டும் என அவர் எண்ணுகிறார்.
“அதற்கான உத்தரவு அரசாங்கத்திடமிருந்து வந்திருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். பாங்க் இஸ்லாம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் என நான் எண்ணவில்லை. காரணம் அந்த நடவடிக்கை பாங்க் இஸ்லாம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதனால் பாதிக்கப்படும்,” என அவர் இன்று காலை கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
தமக்கு வழங்கப்பட்ட இடைநீக்க ஆணை அரசியல் நோக்கம் கொண்டது என நேற்று அஸ்ருல் கூறியிருந்தார்.
“எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இது நிகழ்ந்தது பற்றி நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.”
“நான் மற்றவர்கள் சிரமப்படுவதைக் காண விரும்பவில்லை. இது என்னுடைய எஜமானருடைய நன்மைக்காகும். “மூத்த பிஎன் தலைவர்களிடமிருந்து தமது மேலாளர்கல் தேவையில்லாமல் நெருக்குதலை எதிர்ந்நோக்குகின்றனர்,’ என்றும் அஸ்ருல் சொன்னார்.