இப்ராகிமுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு வேறு சட்டம்

1ibrahimஉங்கள் கருத்து: ‘அவர் ஒவ்வொரு தடவையும் நிந்தனையாகவும் சினமூட்டும் வகையிலும் பேசித் தப்பித்துக்கொள்வது; 1மலேசியா என்பதெல்லாம் வெறும் பேச்சுத்தான் என்பதைக் காண்பிக்கிறது’

‘பைபிளைக் கொளுத்து’ என்ற இப்ராகிம் அலியைச் சாடுகிறார் ஆயர்

ஜெரார்ட் லூர்துசாமி: எரியப்போவது பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிதான்.

அவர் ஒவ்வொரு தடவையும் நிந்தனையாகவும் சினமூட்டும் வகையிலும் பேசித் தப்பித்துக்கொள்வது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்-கின் 1மலேசியா என்பது வெறும் பேச்சுத்தான் என்பதைக் காண்பிக்கிறது.

இப்ராகிம் அலிக்கு என்றும் பாதுகாப்பாக இருப்பவர் அம்னோ ஏற்றிபோற்றும் மகாதிர் முகம்மட். அதனால்தான் மற்றவர்களைக் காட்டிலும் அவருக்குப் பேச்சுரிமை அதிகம்.

குய்கோன்: இப்ராகிம் அலி எல்லாவற்றுக்கும்  பதில் சொல்ல வேண்டிய நாள் வரும். அவருடைய இந்தக் காட்டுக் கூச்சல் கேட்டு மலேசியர்கள் கொதித்துப் போக வேண்டாம்.

சாபா அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ) விசாரணையில் அம்பலமான விசயங்களால் கவனம் முன்னாள் பிரதமர் மகாதிர்மீது திரும்பி இருக்கிறதல்லவா. அதைத் திசைதிருப்ப முயல்கிறார் இப்ராகிம் அலி. இது ஒன்றும் புதிதல்ல.

பக்காத்தான் ரக்யாட் சும்மா இருக்கக்கூடாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மலேசியாவின் மற்ற இடங்களில் நடந்திருக்கூடிய புரொஜெக்ட் ஐசி திட்டங்கள் குறித்தும் தேர்தல் சீரமைப்புமீதும் அரச ஆணையம் அமைத்து விசாரிக்கக் கோரிக்கை விடுக்க வேண்டும்.

பெயரிலி_40f4: பெர்காசா அம்னோவின் கைக்கூலிதானே. அம்னோவின் அசிங்கமான வேலைகளைச் செய்வது அதுதானே.

பெர்காசா தலைவர்கள் காலம்பூராவும் நிந்தனை கருத்துகளைத்தான் தெரிவித்து வருகிறார்கள். அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஏனென்றால் அம்னோ அவர்களைப் பாதுகாக்கிறது.இதற்கு முடிவுகட்ட பிஎன்-னை ஆட்சியிலிருந்து தூக்க வேண்டும்.

லூயிஸ்: இந்த வெறுக்கத்தக்க பேச்சுக்கு நஜிப்பின் மறுமொழி என்ன?

“பைபிள்” என்ற இடத்தில் “குர் ஆன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தால் நஜிப் கைகட்டி மௌனமாக இருந்திருப்பாரா?

மசீச, கெராக்கான், மஇகா ஆகியவை என்ன சொல்கின்றன?

பினாங்கு பிஎன் தலைவர் டெங் சாங் இயோ, மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், கெராக்கான் தலைவர் கோ சூ கூன் ஆகியோர் எங்கு சென்று மறைந்தனர்?

மலேசியாகினி4ஆல்: கோழையே, எதற்காக மற்றவர்களைச் செய்யச் சொல்கிறாய்? நீயே கொளுத்த வேண்டியதுதானே?

விழிப்பானவன்: இப்ராகிம் அலியின் அறிக்கை உலகம் முழுவதும் பரவ வேண்டும். இந்த பாசிர் மாஸ் எம்பி இஸ்லாத்துக்கே ஒரு களங்கம்.

பைபிளைக் கொளுத்தும்போது அதே பைபிளில் ‘அல்லாஹ்’  என்ற சொல்லும் ஆயிரம் இடத்தில் இருக்கும் என்பதை அவர் மறந்துவிட்டார்.

கெஜே ஜான்: ஐயா ஐஜிபி அவர்களே, இவர் பேசியதில் தப்பு இல்லை என்றால் நீங்கள் கலந்துரையாடல் நடத்துவோம் என்று சொல்வதில் அர்த்தமில்லை.

பல்லினவாதி: பல தடவை இனக் கலவரம் உண்டுபண்ண முயன்ற இந்த இனவாதிக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்காகக் காத்திருக்கிறோம்.

தூயமலேசியன்: இந்த மனிதர் வேண்டுமென்றே சீண்டுகிறார். அவரது வலையில் கிறிஸ்துவர்கள் விழுந்து விடக்க்கூடாது. இது, நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கும் தம் எஜமானர்மீதுள்ள கவனத்தைத் திசை திருப்ப அவர் மேற்கொண்டுள்ள முயற்சியாகும்.

நாம் நிதானம் தவறக்கூடாது. மலேசியாவுக்காக பிரார்த்தனை செய்வோம். 13வது பொதுத் தேர்தலில் விவேகமாக வாக்களிப்போம்.

எஸ்ஏஎம்98: ஒரு முஸ்லிம் என்ற முறையில் இப்ராகிம் அலியை எண்ணி வெட்கப்படுகிறேன். இஸ்லாம் மற்ற சமயங்களிடம் அமைதிபாராட்டு, சகிப்புத்தன்மை கொண்டிரு என்று போதிக்கிறது. வெறுப்புணர்வைத் தூண்டும் இந்த வெறியரை போலீஸ் உள்ளே தூக்கிப் போட வேண்டும்.

TAGS: