‘அல்லாஹ்’ விவகாரம் : பக்காத்தான் நிலையில் எந்த மாற்றமும் இல்லை

anwarமுஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ் ‘ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது பாஸ் Syura மன்றம் கொண்டுள்ள கருத்துக்களை தாம் மதிப்பதாக கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அதே வேளையில் அந்த விவகாரம் மீதான பக்காத்தான் ராக்யாட் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனச் சொல்கிறார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிக்கையில் காணப்படும் ஒரு வாசகத்தை முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்றும் ஆனால் அந்த சொல் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி கவலை எழுந்துள்ளது என்றும் அர்த்தம் கொள்ளலாம் என்றார் அவர்.

“நான் Syura மன்ற அறிக்கையையும் பாஸ் தலைவருடைய அறிக்கையையும் வாசித்தேன். நாங்கள் அவர்களுடைய அறிக்கைகளையும் கவலைகளையும் ஆதரிக்கிறோம். அந்த விவகாரத்தில் நான் இஸ்லாத்தின் கருத்துக்களுக்குக் கட்டுப்படுகிறேன்.”

“அந்த சொல் தவறாகப் பயன்படுத்தப்படுவது மீது கவலை நிலவுவதை நான் ஒப்புக் கொள்கிறேன். மலாய் மொழி பைபிள்களை முஸ்லிம் பள்ளிப் பிள்ளைகளுக்கு மக்கள் விநியோகம் செய்கின்றனர் போன்ற செய்திகள் மூலம் முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துமாறு முக்கிய நாளேடுகளுக்குப் பணிக்கப்பட்டுள்ளன.  அது உண்மையென்றால் அதனை விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுங்கள்,” என அன்வார் இன்று சொன்னார்.

“என்றாலும் எங்கள் (பக்காத்தான்) நிலை தெளிவானது. மற்ற சமயங்கள் இழிவுபடுத்தப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை நாங்கள் ஆதரிப்போம், பாதுகாப்போம். மற்ற சமயங்களுக்கும் ஆதரவு அளிப்போம், பாதுகாப்பு கொடுப்போம். கூட்டரசு அரசமைப்பிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.”

 

TAGS: