பைபிளுக்கு எரியூட்டுங்கள், அதற்கான விலை கொடுக்க வேண்டியிருக்கும்

ali“நாங்கள் இதனைச் சகித்துக் கொள்ள மாட்டோம் என போலீசாரும் பொது மக்களும் வாக்காளர்களும் சொல்ல வேண்டும்”

பைபிளை எரிக்கும் ‘திட்டம்’ : பாதுகாப்பை வலுப்படுத்துமாறு போலீசாருக்கு வேண்டுகோள்

அடையாளம் இல்லாதவன்#19098644: ஒற்றுமையைச் சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த கீழறுப்புச் சக்திகள்  திட்டமிட்டு வேலை செய்வதைப் போலத் தெரிகிறது. பைபிளை எரிக்குமாறு முதல் பெர்க்காசா தேசத் துரோகமான அறைகூவலை விடுக்கிறது. அடுத்து ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் “பைபிள் எரிப்பு விழா” பற்றிய துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்படுகின்றது.

ஆளும் வர்க்கத்தின் ஒப்புதலும் ஆதரவும் இல்லாமல் அவை நிகழ்ந்திருக்க முடியாது. பதற்றத்தை ஏற்படுத்தி  அவசர காலத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதே அவற்றின் நோக்கமாகும். அதனைத் தொடர்ந்து பிஎன் எதிர்ப்பாளர்கள் ஒடுக்கப்படுவதற்கு வகை செய்யப்படும்.

சுவர்க் கண்ணாடி: அந்த விவகாரம் மீது பாதுகாப்பை வலுப்படுத்துமாறு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் போலீசாரை கேட்டுக் கொள்ள வேண்டும்.

புகார் செய்யப்பட்டவுடன் நடவடிக்கையில் இறங்குவது போலீசாரின் கடமை இல்லையா ?

கூட்டரசுத் தலைவர்கள் அது குறித்து எதுவும் சொல்லாமல் இருப்பது வருத்தத்தைத் தருகின்றது.

டுட்: பிஎன் வாக்குகளைப் பெற விரும்பினால் எல்லா மலேசியர்களுக்குமான அரசியல் கட்சி என அது  தன்னைக் காட்டிக் கொண்டால் போதும்.

ஆனால் பிஎன் இப்போது இன, சமய அட்டையைப் பயன்படுத்தி வருவது தெளிவாகத் தெரிகிறது. பிஎன் நாட்டுக்கு நன்மையைத் தரும் என்றால் இன வேறுபாடின்றி எல்லா மலேசியர்களும் அதனை ஆதரிப்பர்.

பைபிளுக்கு எரியூட்டுவது உட்பட பல விஷயங்களில் அது வேறு விதமாக நடந்து கொள்கின்றது. நான் கிறிஸ்துவன் அல்ல.

மியோப்101: தேவாலயம் ஒடுக்கப்படுவதற்கு இடையில் வளர்ச்சி அடைகின்றது. நாங்கள் வன்முறைக்கு வன்முறை வழி பதில் சொல்ல மாட்டோம் என்பதையும் பிரார்த்தனைகள், நேசம் ஆகியவற்றின் மூலம் பதில் கொடுப்போம். 13வது பொதுத் தேர்தலில் என்ன செய்வது என்பது எங்களுக்குத் தெரியும்.

மாற்றம்: லோரி அளவு பைபிள்களை அவர்கள் எரிக்க அனுமதிப்போம். அவர்கள் ஏற்கனவே தேவாலயத்தை  எரித்துள்ளனர். அது தான் அவர்கள் மனப்போக்கு.

இத்தகைய மலிவான அரசதந்திரிகளினால் இஸ்லாத்தின் புனிதத்தன்மை மாசுபடுகிறது. இன்னொரு சமயத்தை   சார்ந்த மக்களுடன் சாண்டையிடுமாறு சொன்ன எந்த இறைவனையும் நான் பார்த்தது இல்லை.

உள்துறை அமைச்சரும் முஸ்லிம் அல்லாத கட்சிகளான மசீச, மஇகா போன்றவை இது வரை ஒன்றுமே  சொல்லவில்லை.

ஆடு: கிறிஸ்துவர்கள் அந்த வலைக்குள் விழுந்து விடக் கூடாது. இறைவன் அவர்களைக் காப்பாற்றட்டும். கள்ளக் குடியேறிகள் மீதான சபா ஆர்சிஐ மீது மக்கள் கொண்டுள்ள கவனத்தைத் திசை திருப்புவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்டவரே இப்ராஹிம் அலி ஆவார்.

கிறிஸ்துவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அந்த வேதநூலை எரிக்க விரும்பினால் அதனைச் செய்ய விட்டு விடுங்கள். கால ஒட்டத்தில் அவர்கள் அதற்கு விலை கொடுப்பார்கள்.

அடையாளம் இல்லாதவன்_40f4: வழக்கம் போல ஒரே மலேசியா பிரதமர் அது பற்றிக் கருத்துச் சொல்ல மாட்டார். முஸ்லிம்களை முட்டாளாக்குவதற்காக அவர் காசாவில் மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தி காசாவில் பொது உறவு நடவடிக்கையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.

சினமடைந்துள்ள பறவை: பெர்க்காசா தலைவரும் பாசிர் மாஸ் எம்பியுமான இப்ராஹிம் அலி கைது செய்யப்பட்டு தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும். போலீஸ் அதனைச் செய்யவில்லை என்றால் அது இரட்டைத் தரத்தைப் பின்பற்றுகிறது என்பது தெளிவாகி விடும்.

 

TAGS: