“பிஎன் -னைப் போன்று பத்துமலை கொண்டோ திட்டத்தைக் கைவிடுவதற்கு 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும் என அவர் அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை”
சிலாங்கூர் பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை ரத்துச் செய்தது
மூன் டைம்: பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை ரத்துச் செய்வது என மாநில அரசு எடுத்த முடிவை நான் பாராட்டுகிறேன்.
சிலாங்கூர் பிஎன் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த முடிவு கிடைத்திருக்குமா என நான் சந்தேகிக்கிறேன்.
அதனிடம் பணம், அதிகாரம், பேராசை ஆகியவற்றுடன் மமதையும் முட்டாள்தனமும் சேர்ந்து கொண்டிருப்பதால் அந்த கொண்டோ திட்டம் நிச்சயம் தொடர்ந்திருக்கும்.
பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற முடியும் என எண்ணுகின்றவர்கள் மீண்டும் சிந்திப்பது நல்லது.
நியாயமானவன்: சிலாங்கூரை பிஎன் மீண்டும் கைப்பற்றுமானால் அந்தத் திட்டத்தை பிஎன் ரத்துச் செய்யும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருந்தார். அன்புள்ள மந்திரி புசார் காலித் இப்ராஹிம் அவர்களே நீங்கள் கொடுத்தது நெற்றியடி.
அபாச்சே: தான் ஸ்ரீ காலித் நீங்கள் செய்தது நல்ல முடிவு. பத்துமலை கொண்டோ திட்டத்தைக் கை விடுவதற்கு 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும் என அச்சுறுத்த வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.
சிலாங்கூருக்கும் சிலாங்கூர் மக்களுக்கும் உங்கள் நற்பணிகள் தொடரட்டும்.
அடையாளம் இல்லாதவன்#92553906: காலித் சிறிது தடுமாற்றத்துடன் பணிகளைத் தொடங்கிய போதிலும்இப்போது அவர் முதிர்ச்சி அடைந்த சிறந்த தலைவராக உருவெடுத்துள்ளார். உங்களைப் பற்றி பெருமை கொள்கிறோம்.
நீங்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நேரம் எடுத்துக் கொண்டு முறையாக எல்லாவற்றையும் செய்தீர்கள்.
நீர்வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் முதலாவதாகும். இரண்டாவது பத்துமலை ‘கொண்டோ’.
வரும் தேர்தலில் நீங்களும் பக்காத்தான் ராக்யாட்டும் வெற்றி பெற முருகப் பெருமானின் இறையருள் கிடைக்கட்டும்.
மஹாஷித்லா: மந்திரி புசார் காலித்-துக்கும் பக்காத்தானுக்கும் ஒரு சபாஷ். நீங்கள் தான் உண்மையான மக்கள்பேராளர்கள். கௌரவமானவர்கள், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள், மக்கள் நலனைக் கருத்திக் கொண்டவர்கள்.
சுற்றுச்சூழலுக்கு நட்புறவாக இல்லாத பிஎன் அங்கீகரித்த ஒரு திட்டத்தை ரத்துச் செய்ய பிஎன் வெற்றி பெற வேண்டிய அவசியம் இப்போது எங்களுக்கு இல்லை. ஊழல் மலிந்த பிஎன் -னைக் காட்டிலும் நல்ல முறையிலும் கௌரவமாகவும் வேலை செய்ய முடியும் என்பதை பக்காத்தான் நிரூபித்து விட்டது. அதற்கு இன்னொரு தவணைக் காலம் வழங்கப்பட வேண்டும்.
கலா: டோல்மைட் பத்துமலை கொண்டோ திட்டத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன ? ஊராட்சி மன்றங்கள் உள்ளூர் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளா விட்டால் இது போன்று மீண்டும் பல முறை நிகழக் கூடும்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்யாமல் இருந்தால் அவர்கள் எப்படி மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் ? அதனால் கூட்டரசு அரசாங்கத்தை மாற்றுக் கூட்டணி கைப்பற்றுமானால் ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்கு புத்துயிரூட்டுவது பற்றிப் பரிசீலிக்க வேண்டும்.
அபுமினபள்: நன்றி காலித், பாராட்டப்பட வேண்டிய மதிக்கப்பட வேண்டிய முதலாவது சிலாங்கூர் மந்திரி புசார் நீங்கள் தான். ஊழல் மலிந்த பழைய வழிகளுக்கும் பொறுப்புள்ள ஜனநாயக ஆளுமைக்கும் இடையில் நீங்கள் நல்ல முறையில் நிர்வாகம் செய்து வருகின்றீர்கள். உங்கள் சாதனைகள் குறித்து நான் பெருமை கொள்கிறேன்.
அல்பா: உண்மை நிலைகளை அறிந்து அவற்றை விவேகத்துடன் ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதற்கு தமக்கு உள்ள ஆற்றலை காலித் பல முறை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜோன் கோ டிசி: பத்துமலை ஒர் உலகப் பாரம்பரியமாகும். அதனை உலகப் பாரம்பரியமாக்குவதற்கு பக்காத்தான் ஐநா-விடம் விண்ணப்பிக்க வேண்டும்.