‘ஹத்தி ரக்யாட்’ திட்டங்களுக்கு அரசு ரிம50 மில்லியன் ஒதுக்கீடு

1najibமகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சின் ‘ஹத்தி ரக்யாட் (மக்கள் இதயம்)’ திட்டங்களுக்காக அரசாங்கம் ரிம 50 மில்லியனை ஒதுக்கியுள்ளது.  அத்திட்டங்கள் அடுத்த மாதம் தொடங்கும்.

இதை, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார். பிரதமர், இன்று கோலாலும்பூரில் டேவான் பெர்டானா பெல்டாவில் நடைபெற்ற மகளிர் அமைப்பு தேசிய மன்றத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்.

தனித்து வாழும் தாய்மார்கள், சிறப்பு உதவி தேவைப்படும் மக்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக அந்நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நஜிப் கூறினார்.

“அதைக் கொண்டு மூத்த குடிமக்களுக்குப் பயிற்சிகள் அளிக்கவும் சக்கர நாற்காலிகள், அரைக்கச்சை முதலியவை வாங்கவும் உதவி அளிக்கப்படும். இதிலிருந்து 1Azam திட்டத்துக்கும் பண உதவி செய்யப்படும். அது, சுயமாக சிறு தொழில்கள் தொடங்க எண்ணம் கொண்டிருக்கும் மகளிருக்கு உதவியாக இருக்கும்”, என அவர் கொண்டாட்டங்களைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

TAGS: