பொதுத் தேர்தலை நடத்த எந்தப் பிரதமரும் இவ்வளவு நாள் காத்திருந்தது இல்லை

najib“மகத்தான வெற்றி பெறுவோம் என உங்களுடைய சேவகர்களும் அரசியல் பார்வையாளர்களும் சொன்ன போதிலும் தேதியை அறிவிப்பதற்கு உங்களுக்குத் துணிச்சல் வரவில்லை”

பொதுத் தேர்தல் தேதியைக் கேட்டு எனக்கு தொல்லை தர வேண்டாம் என்கிறார் பிரதமர்

மூன்டைம்: தேர்தல் தேதி குறித்து நாங்கள் உங்களை தொடர்ந்து நச்சரித்துத் தான் வருவோம். ஏனெனில் மகத்தான வெற்றி பெறுவோம் என உங்களுடைய சேவகர்களும் அரசியல் பார்வையாளர்களும் சொன்ன போதிலும் தேதியை அறிவிப்பதற்கு உங்களுக்குத் துணிச்சல் வரவில்லை.

இவ்வாண்டுப் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பு வரிசையில் நீங்கள் அமரக் கூடும் என உங்கள் உள்மனது சொல்வது தான் அதற்குக் காரணமா ? இல்லை என்றால் நாடாளுமன்றத்துக்குக் கூடப் போக முடியாமல் ஒய்வுத் தலத்தில் இருக்க வேண்டி வரும் என்ற அச்சம் காரணமா ?

அதிகக் கறையுள்ள மலேசியப் பிரதமர் நீங்களே என்ற தோற்றமும் உங்களுக்கு உண்டு. எங்கள் வாக்குகளைச் செலுத்தி நல்ல அரசாங்கத்தை தேர்வு செய்ய நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

திசியா: எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள உங்களுக்குத் துணிச்சல் இல்லை என்பது தான் உண்மை. அதனால்நீங்கள் தேர்தல் தேதியை அறிவிக்கவும் தயங்குகின்றீர்கள்.எதிர்க்கட்சிகள் தயாராக இல்லாத வேளையில் தேர்தலை நடத்த நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

ஆஸ்திரேலியாவிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பே ஆளும் அரசாங்கம் தேர்தல் தேதியை அறிவித்து விட்டது. எல்லாக் கட்சிகளும் தயாராவதற்கு அது உதவும்.

அம்னோவுக்கு நியாயம் என்பதே தெரியாது. ஏமாற்றுவது, மோசடியில் ஈடுபடுவது, ஊழல் ஆகியவை எல்லாம் அம்னோவில் ஊறிப் போய் விட்டது.

சிப்முங்: பொதுத் தேர்தல் தேதியை அறிவிக்க முடியாது என நஜிப் சொல்வதற்குக் காரணம் உள்ளது. அவர் இன்னும் ஒரே மலேசியா உதவித் தொகையை இன்னும் கொடுத்து முடிக்கவில்லை.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கிலார்டைப் பாருங்கள். அவர் எவ்வளவு துணிச்சலாக 2013 செப்டம்பர் 14ம் தேதி  பொதுத் தேர்தல் நிகழும் என அறிவித்துள்ளார்.

லைனாஸ் வேண்டாம்: சிறந்த அரசியல் முறையைப் பெற்றிருந்ததால் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை தங்கள் தேர்தல்களை சீராக நடத்தி முடித்துள்ளன. நாம் மூன்றாம் உலக சிந்தனையைக் கொண்ட மூன்றாம் உலக நாட்டில் வாழ்கிறோம். ‘தொல்லை’ கொடுக்க வேண்டாம் எனக் குடிமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஜே தான்: ‘தொல்லை’ போன்ற சொற்களைப் பயன்படுத்தும்  எத்தகைய பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார்பாருங்கள் ! அவர் உண்மையில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் விவாதம் நடத்தவே அஞ்சுகிறார்.

அடையாளம் இல்லாதவன்_40f4: பொறுப்புள்ள ஒர் அரசாங்கம் தேர்தல் தேதி மீது ஊகங்கள் பரவுவதற்கு அனுமதிக்காது. அந்த சூழ்நிலை முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்காது. மக்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.

சாஷி: மிகவும் கோழைத்தனமான அறிக்கை. மலேசியா பெற்றிராத மோசமான பிரதமர் நீங்களே. மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதைத் தவிர அவர்களைச் சந்திப்பதற்கு உங்களுக்கு எந்தத் துணிச்சலும் இல்லை.

உங்கள் பல்லவிக்கு ஆடும் ஊழல் தலைவர்கள் உங்களைச் சுற்றி இருப்பதால் நீங்கள் இந்த கறை படிந்த ஆட்டத்தை நடத்த முடிகிறது.

Alfka: BR1M என்றால் ‘Beri Rasuah 1Malaysia’ எனப் பொருள்படும்.

ஜைனல்: ஆகவே BR1M திரட்டப்பட்ட வருமான வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. ஆகவே அது மக்கள் பணம். பிஎன் பணம் அல்ல. அப்ப்டி என்றால் அது ஏன் பிஎன் நிகழ்வுகளில் கொடுக்கப்படுகின்றது ?

எல்ஜேசி: பிரதமர் அவர்களே, அந்த 500 ரிங்கிட் மூலம் வாக்குகளை விலைக்கு வாங்குகின்றீர்களா ? 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்கள் ஏழைகளாகவும் ஏதும் அறியாதவர்களாகவும் இருப்பது தான் பிஎன் வெற்றியா ? உங்களுக்கும் பிஎன் -னுக்கும் பாராட்டுக்கள். தாங்கள் ஏமாற்றப்படுவதை மலேசிய மக்கள் எப்போது தான் உணருவார்கள் ?

 

TAGS: