மகாதீர் திட்டத்துக்கு ஒருவரை ஒருவர் பழி போடுவது போதும்

PMs“அந்த அடையாளக் கார்டு திட்டத்துக்கு யாரும் பொறுப்பில்லை. ஏதோ திடீரென நிகழ்ந்து விட்டது என்பது இப்போது உறுதியாகி உள்ளது”

‘அடையாளக் கார்டு திட்டத்தில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறுவதை பாக் லா மறுக்கிறார்.

ஹெர்மிட்: குளறுபடியான வாக்காளர் பட்டியலுடன் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெறும் வாய்ப்பே கிடையாது.  டாக்டர் மகாதீர்  முகமட் தாம் 22 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு உதவியாக நூறாயிரக்கணக்கான குடியேற்றக்காரர்களை குடி மக்களாக்கி வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையத்தையும் தேசியப் பதிவுத் துறையையும் பயன்படுத்தியது சபா கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி விட்டது.

இந்த நாட்டை அம்னோ தொடர்ந்து ஆளுவதற்காக குடியேற்றக்காரர்களுக்கு வாக்குரிமை வழங்கும் நடவடிக்கை அப்துல்லா அகமட் படாவி, நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்திலும் தொடர்ந்ததாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தகவல் வெளியிட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்ற போது துங்கு அப்துல் ரஹ்மான் வழங்கிய குடியுரிமையைப் போன்று அல்லாது, மகாதீர் மூளையில் உதித்த குடியுரிமைத் திட்டம் கள்ளத்தனமாக மேற்கொள்ளப்பட்டது என்பது ஆர்சிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பார்வையாளன்: சட்ட விரோதமாக பெரிய அளவில் அடையாளக் கார்டுகளையும் குடியுரிமைகளை வழங்கும்   திட்டம் பற்றி பெரும்பாலான உயர் நிலை பிஎன் தலைவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

மகாதீர், தமது அரசியல் செயலாளர், காலஞ்சென்ற தமது உள்துறை அமைச்சர் ஆகியோரது உதவியுடன் அவர் அந்தத் திட்டத்தை மேற்கொண்டார்.

மக்கள் பணத்தைத் திருடுவதற்கு பல வகையான ஊழல் வழிகளை பின்பற்றுவது இயல்பாகி விட்டதால் அந்த உயர் நிலை பிஎன் தலைவர்கள் எந்த சட்ட விரோத நடவடிக்கை பற்றியும் புகார் செய்வதும் இல்லை. ஆகவே அடையாளக் கார்டும் குடியுரிமையும் வழங்கும் இன்னொரு சட்ட விரோத நடவடிக்கை அவர்களுக்குப் பெரிய விஷயமல்ல.

அத்துடன் அது மகாதீர் திட்டமாகும். அதனால் அதனைக் குறை கூறி அவரைப் புண்படுத்தும் துணிச்சலும் அவர்களுக்கு கிடையாது. அவ்வாறு செய்வது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கே உலை வைத்து விடும்.

அந்த சட்ட விரோத வாக்குகள் பிஎன் வெற்றியை உறுதி செய்ததால் அனைவருமே நன்மை அடைந்தனர் என்பதே மிக முக்கியமான விஷயமாகும். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து நாட்டை கொள்ளையடித்தனர்.

அப்துல்லாவும் நஜிப்பும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் தங்க முட்டையிடும் வாத்தை அவர்கள் கொல்ல விரும்பவில்லை.

பெர்ட் தான்: எப்போதும் ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும் முன்னாள் பிரதமர் அப்துல்லா, சபாவில்அடையாளக் கார்டு திட்டத்தில் அவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக  அன்வார் கூறிக் கொண்டதை உடனடியாக மறுத்தது தான் வியப்பை அளிக்கிறது. தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு அவர் ஆணித்தரமாக முன் வந்தது மிகவும் கவர்ச்சியாக உள்ளது.

இப்போது தான் அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாரா ? மகாதீர் அவரை பல முறை கிண்டலாகப் பேசியுள்ளார். அப்போது அந்த மகா-பூனை தம்மை விழுங்கி விடும் என்ற அச்சத்தில் எல்லாம் எலியைப் போல அவர் பதுங்கியிருந்தார்.

அது தான் நமக்குத் தெரிந்த அப்துல்லா. அவருடைய பலவீனமாக குணத்திற்காக மலேசியர்கள் அவர் மீது அனுதாபம் கொள்ளலாம். பிரதமராக இருந்த போது அவரது நோக்கங்கள் நல்லவையாக இருக்கலாம். ஆனால் அவை அவருக்கு மரியாதையைத் தரவில்லை.

டூட்: இசி என்ற தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டுள்ளது. அந்தத் துரோகச் செயலுக்குப் பொறுப்பான அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். மகாதீர் திட்டத்துக்கு ஒருவரை ஒருவர் பழி போடுவது போதும்.

குழப்பம் இல்லாதவன்: அந்த அடையாளக் கார்டு திட்டத்துக்கு யாரும் பொறுப்பில்லை ஏதோ திடீரெனநிகழ்ந்து விட்டது என்பது இப்போது உறுதியாகி உள்ளது

அந்த தேசத் துரோக நடவடிக்கையால் யார் நன்மை அடைந்தார்கள்.  நிச்சயமாக பிஎன் தான். ஆகவே அதற்கு பிஎன் -னே பொறுப்பேற்க வேண்டும். குறைந்தது இரண்டு பிரதமர்களுடைய ஆட்சியில் அது தொடர்ந்துள்ளது.

யார் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது முக்கியமல்ல. பிஎன் முழுக்க முழுக்க ஊழல் நிறைந்தது என்பது இப்போது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது பொதுத் தேர்தலில் விரட்டப்பட வேண்டும்.

அந்த தேசத் துரோக நடவடிக்கைக்கு உண்மையில் யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய ஆர்சிஐ முயலுகிறது.  புத்ராஜெயாவை பக்காத்தான் கைப்பற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

TAGS: