பாஸ் கட்சி ‘அல்லாஹ்’ வை வைத்துக் கொள்ளலாம்; ஆனால் பக்காத்தான் முடிவில் மாற்றமில்லை

pas“அரசமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றங்களும் அவ்வாறே செய்துள்ளன. பக்காத்தான் ராக்யாட்டும் அதனையே முடிவு செய்துள்ளது. பாஸ் மாறுபட விரும்புகிறது. அதனை விட்டு விடுங்கள்”

பாஸ்: ‘அல்லாஹ்’ விஷயத்தில் மறு ஆய்வு கிடையாது

கறுப்பு மம்பா: ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஏன் பாஸ் கட்சிக்கு முறையீடு செய்து கொள்ள வேண்டும் ?

பாஸ் தன்னை ஒர் இஸ்லாமியக் கட்சி என அழைத்துக் கொண்டுள்ளது. ஆகவே அது தனது சித்தாந்தங்களை தற்காக்கிறது.

அதன் syura மன்றம் தான் விரும்பும் எதனையும் முடிவு செய்யலாம். ஆனால் அவை முஸ்லிம் அல்லாதாரைக் கட்டுப்படுத்தாது.

‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது சமயச் சார்பற்ற நமது நீதிமன்றங்களே முடிவு செய்ய வேண்டும். மற்ற சமயங்களும் அதனைப் பயன்படுத்தலாம் என அவை இதுவரை தீர்ப்பளித்துள்ளன.

ஆகவே அதனை அப்படியே விட்டு விடுங்கள். பல நூற்றாண்டுகளாக ஒரு பிரச்னையாக இல்லாத ஒரு விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்.

முகமூடி: ‘அல்லாஹ்’ விஷயத்தை அப்படியே விடுவதே நல்லது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அந்த முடிவைச் செய்வதற்கு பாஸ் syura மன்றத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

அதே வேளையில் கிறிஸ்துவர்களாகிய நாங்கள் இறைவனை பாஹாசா மலேசியாவில் அல்லாஹ் என்பது உட்பட நாங்கள் விரும்பும் வழியில் அழைப்போம்.

மாற்றத்துக்கான நேரம்:  மறு ஆய்வு செய்யுமாறு ஏன் பாஸ் கட்சியை வேண்டிக் கொள்ள வேண்டும் ?  முஸ்லிம் அல்லாதார்  ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை அனுமதிப்பது மீது பாஸ் மற்ற கூட்டணித் தோழமைக் கட்சிகளுடன் இணக்கம் கண்டுள்ள வேளையில் அதற்கு தோழமைக் கட்சிகள் மீது நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுகின்றது. ஏன் இந்த 180 டிகிரி மாற்றம் ?

ஜிமினி கிரிக்கெட்: பாஸ் வியூகம் மிகவும் எளிமையானது. மலாய்க்காரர்கள் அதிகப்  பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவதே அதன் நோக்கம். அந்தத் தொகுதிகளில் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர் எண்ணிக்கை மிகவும் குறைவு. அந்த மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களில் கிறிஸ்துவர்கள் மிக மிகக் குறைவாகும்.

ஆகவே இன்னும் முடிவு செய்யாத மலாய் வாக்காளர்களை சமயத்தின் மூலம் இழுப்பதே பாஸ் எண்ணமாகும். சில கிறிஸ்துவர்களை பொருட்படுத்தாமல் இஸ்லாத்தின் வீரராக தன்னைக் காட்டிக் கொள்ள அது விரும்புகிறது.

அது இரு பக்கமும் கூர்மையான கத்தியாகும். ஆனால் முஸ்லிம் அல்லாதாரில் பெரும்பான்மையோர் விலகிப் போய் விடுவார் என்பதை பாஸ் கருத்தில் கொள்ளவில்லை.

Cogito Ergo Sum: கடைசி நேரத்தில் பக்காத்தான் தலைவர்கள் ஏய்க்கப்படுகின்றனர். பிஎன் -னுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் ‘அல்லாஹ்’ தொடர்பான நிலையே அதற்குக் காரணம் என பக்காத்தான் சொல்லி விட முடியும்.

ABBN: நமது கிழக்கு மலேசிய கிறிஸ்துவ சகோதரர்களும் சகோதரிகளும் மேற்கு மலேசியாவில் இருக்கும்போது தங்கள் கடவுளை ‘அல்லாஹ்’ என அழைக்கலாமா ?

எம்ஏ: கிறிஸ்துவர்களாகிய நாமும் அதே சிந்தனையைக் கொண்ட மற்றவர்களும் சட்டமன்றத் தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கூடாது.

தாங்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதை அவர்கள் பல முறை நிரூபித்து விட்டார்கள்.

Apa Ini?: அரசமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றங்களும் அவ்வாறே செய்துள்ளன. பக்காத்தான் ராக்யாட்டும் அதனையே முடிவு செய்துள்ளது. பாஸ் மாறுபட விரும்புகிறது. அதனை விட்டு விடுங்கள் கர்பால் அவர்களே.

மனுக்குலம்: முஸ்லிம் அல்லாதார் மீது பாஸ் syura மன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அவ்வளவு தான். முஸ்லிம் அல்லாதார் தங்கள் கடவுளை தாங்கள் விரும்பும் பெயர்களில் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்.

 

TAGS: