உங்கள் கருத்து : இசி ஹீரோ அல்ல வில்லன்!

azizபக்காத்தான் ஆட்சிக்கு வரும் போது ‘சபா ஆர்சிஐ-யைப் போன்று தேர்தல் ஆணையம் (இசி) மீது இன்னொரு ஆர்சிஐ அமைக்கப்படும்.”

இசி தலைவர்: சபா ஆர்சிஐ முடிவுகள் மீது முன் கூட்டியே கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம்

சேரிப் பையன்: இசி நடத்தியுள்ள பெரிய பெரிய தேர்தல் மோசடியை அதன் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப், ஒரு திரைப்பட ஹீரோவுடன் ஒப்பீடு செய்துள்ளார். அந்த மனிதர் உண்மையுள்ள புத்தியுள்ளவரா அல்லது முட்டாளா ? அகோங், நாடு, மக்கள் ஆகிய தரப்புக்களுக்கு எதிராக அவரும் இசி-யும் இழைத்துள்ள தீங்கின் கடுமையை அவர் புரிந்து கொண்டுள்ளாரா ?

வேறு எந்த ஜனநாயக நாட்டிலாவது அவர் அதனைச் செய்திருந்தால் அவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டு தேசத் துரோகத்துக்காக விசாரிக்கப்படுவதற்குக் காத்திருக்க வேண்டும். அம்னோ நிலத்தில் எல்லாம் முடியும். அவர் தொடர்ந்து தேசத் துரோகத்தைச் செய்யலாம்.

சபா ஆர்சிஐ முடிவு குறித்து அவருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அடையாளக் கார்டு திட்டம் தனிப்பட்ட சம்பவம் என்றும் போதுமான ஆதாரம் இல்லாததால் அடுத்த நடவடிக்கை தேவை இல்லை என ஆர்சிஐ முடிவு செய்யும்.

லின் வென்குவான்: அப்துல் அஜிஸ் சொல்வது கெட்டிக்காரத்தனமான வாதம். என்றாலும் இங்கு இசி-யை நாம் ஹீரோ என எடுத்துக் கொள்ளக் கூடாது. வில்லன் என்பது தான் பொருத்தமான பங்கு.

அந்தத் தகுதி ஒரு புறம் இருக்கட்டும் என்றாலும் அவர் எடுத்துக் கொண்ட கதை பொருத்தமாக உள்ளது.

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துமாறு பெர்சே பேரணிகள் வழி மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்க முடியாமல் ‘மயக்க நிலையில்’ அது இருந்தது.

நியாயமான தேர்தல்: இசி தனது வேலையை முறையாகச் செய்திருந்தால் ஆர்சிஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

இந்த சூழ்நிலையில் சாட்சியமளித்தவர்களைத் தவிர ஹீரோக்கள் யாரும் இல்லை. எல்லாரும் வில்லன்களே.

அவர்களில் சிலர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். பிஎன் பாணி அரசாங்கத்தில் வில்லன்கள் தப்பி விடுவர். தகவல் சொன்னவர்களே மாட்டிக் கொள்வர்.

இங்கு வில்லன்கள் ஒருவர் மீது ஒருவர் பழி போடுகின்றனர். வில்லன்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும். இசி-யும் அவர்களில் ஒன்று.

அடையாளம் இல்லாதவன்#43051382: அந்த ஆவி வாக்காளர்களை முறியடிப்பதற்கு ஒரே வழி வாக்குகளைச் செலுத்துவதற்கு உங்கள் எல்லா நண்பர்களையும் உறவினர்களையும் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லுமாறு செய்வதே ஒரே வழியாகும்.

எவ்வளவு ஆவி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் மக்கள் சக்தி பலமாக இருக்கும் போது அவர்கள் பயனற்றவர்களாகி விடுவர்.

கேஜே ஜான்: அப்துல் அஜிஸ் அவர்களே ஏன் உண்மையை சொல்லக் கூடாது ? பொருத்தமற்ற வாதங்களைமுன் வைக்க வேண்டாம். இது திரைப்படம் அல்ல. மாமன்னர் பெயரின் கீழ் அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் அது.

ராம் சிங்: அப்துல் அஜிஸ், நீங்கள் வேலை நேரத்தில் நிறைய இந்தி/தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பதாக நான் எண்ணுகிறேன்.

செம்பருத்தி: இசி தலைவர் தேர்தல் மோசடிகளைக் குறைக்க உண்மையில் விரும்பினால் சட்ட விரோத வாக்காளர்கள் இருப்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதால் அவர் உடனடியாக வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தத் தொடங்கியிருக்க வேண்டும்.

சட்ட விரோத வாக்காளர் பிரசனை பொதுத் தேர்தல் முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அதுவே ஒரே வழி.

அபத்தமாகப் பேசுவதும் அறிக்கை விடுவதும் இசி காலத்தைக் கடத்தும் செயலாகும். பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் போது பட்டியலைத் தூய்மைப்படுத்த முடியாமல் போய் விடும்.

அடையாளம் இல்லாதவன்#43051382: 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புத்ராஜெயாவை பக்காத்தான் எடுத்துக் கொண்டதும் அப்துல் அஜிஸ் நிச்சயம் திரைப்படத் தயாரிப்புத் துறையில் இறங்கப் போகிறார்.

முகமூடி: அப்துல் அஜிஸ் அவர்களே உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. திருந்துவதற்கும் வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் நீங்கள் அதனைச் செய்ய மறுக்கின்றீர்கள். பக்காத்தான் ஆட்சிக்கு வரும் போது சபா ஆர்சிஐ-யைப் போன்று தேர்தல் ஆணையம் (இசி) மீது இன்னொரு ஆர்சிஐ அமைக்கப்படும்.

 

TAGS: