லெம்பா பந்தாய் நூருலுக்கு அவ்வளவு பாதுகாப்பான இடமல்ல

1nurulஉங்கள் கருத்து:லெம்பா பந்தாய் வாக்காளர்களில் 25 விழுக்காட்டினர்தான் பங்சார்வாசிகள். மற்ற 75விழுக்காட்டினர்?’

லெம்பா பந்தாயைப் பிடிப்பது பிஎன்னுக்குக் கடினமாக இருக்குமா?

ஸ்வைபெண்டர்: அம்னோ, மக்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெறுவது எப்படி என்பதை அறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. பல்லாண்டுகளாக தேர்தலில் மோசடி செய்தும், ஊழல்கள் புரிந்தும் திமிராக நடந்துகொண்டும் வந்துள்ள அவர்கள் மக்களின் உணர்வுகளுடன் தொடர்பற்றவர்களாக மாறிவிட்டார்கள்.

பணத்தைக் கொண்டும் இன, சமய உணர்வுகளைத் தூண்டிவிட்டும் அதிகாரத்தைப் பெற்று விடலாம் என்றவர்கள் நினைக்கிறார்கள்.

மக்கள், ஊழல்-அற்ற நியாயமான, நேர்மையான ஆட்சியைதான் விரும்புகிறார்கள். அம்னோவின் பந்துவான் ரக்யாட் 1மலேசியாவையோ, அங் பாவ்-களையோ, தேர்தலின்போது கொடுக்கப்படும் சின்னச்சின்ன அன்பளிப்புகளையோ அல்ல.

பெயரிலி #21828131: வெளிப்படையாகவே ஊழல் அனுமதிக்கப்படுவதுபோல் தெரிகிறது

இந்த அறிக்கையைப் படித்துப் பாருங்களேன்: “அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்க ராஜா நொங் சிக் தம் சொந்த பணத்திலிருந்து ரிம40,000 கொடுத்திருக்கிறார் என்றும் பெற்றோர்கள் இதை நினைவில் வைத்து நேரம்போது பிஎன்னுக்கு வாக்களிக்கும் சரியான காரியத்தைச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினர்”.

இதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரிக்க வேண்டும். ரொக்க அன்பளிப்பு வழங்குவதாக இருந்தால் தாராளமாகக் கொடுங்கள். ஆனால், அதைத் தேர்தலுடன் தொடர்புப் படுத்தாதீர்கள். அது தூண்டுதலாகும், அப்பட்டமான ஊழலாகும்.

மஸ்லினா: மலேசியாகினி வாசகர்கள் பக்காத்தான் நிச்சயம் வெல்லும் என்று நம்பிக்கை கொள்வது இயல்பே.

உண்மை என்னவெனில், லெம்பா பந்தாய் வாக்காளர்களில் 25 விழுக்காட்டினர்தான் பங்சார்வாசிகள். மற்ற 75விழுக்காட்டினர்?

அவர்கள் பந்தாய் டாலாம், கிரிஞ்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கூட்டரசு பிரதேச அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின், அப்பகுதிகளில் திருமணங்களுக்குச் செல்கிறார். நோயுற்றிருப்போரைப் பார்த்து அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்குகிறார். தே தாரிக் அருந்திக் கொண்டே மக்களுடன் கலந்துரையாடுகிறார். நோன்பு மாதத்தில் அதிகாலை உணவு உண்ணவும்கூட சென்றிருக்கிறார்.

அயராது உழைப்பவர், பிரச்னைகளைத் தீர்த்து வைப்பவர். அதற்காக மக்களால் மதிக்கப்படுபவர். எனவே, லெம்பா பந்தாய் தொகுதி  நூருல் இஸ்ஸா அன்வாருக்குப் பாதுகாப்பான இடமல்ல. இதை பங்சார் குடியிருப்பாளர்கள் உணர வேண்டும்.

லெம்பா பந்தாய் அம்னோ நான்காவது ஆண்டாக மாணவர்களுக்கு பரிசளிக்கும் அந்நிகழ்வை நடத்தி வருகிறதாம். அதைத்தான் கவனிக்க வேண்டும்.

நாஜா நொங் சிக், கடந்த நான்காண்டுகளாக பந்தாய் டாலாம், கிரிஞ்சி, செந்தோசா பகுதிகளில் அடிநிலை மக்களுடன் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார். இக்காலத்தில் நுருல், பெரும்பகுதி நேரத்தை தம் தொகுதிக்கு வெளியில் கட்சிப் பணிகளுக்காக செலவிட்டு வந்தார்.

நாடு முழுக்கச் சென்று சொற்பொழிவாற்றுகிறார். அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அண்மையில்தான் அவரை அவருடைய தொகுதியில் பார்க்க முடிந்தது.

அதே வேளை ராஜா நொங் சிக், நிறைய நேரத்தை அங்கு செலவிடுகிறார். அடுக்குமாடி வீடுகளுக்கு, தனியாருக்குச் சொந்தமானவற்றுக்குக்கூட புதுச் சாயம் பூசப்படுவதை உறுதிப்படுத்துகிறார், தண்ணீர் பம்புகள், மின்தூக்கிகள் கெட்டுபோயிருந்தால் பழுதுப்பார்க்க ஏற்பாடு செய்கிறார். மக்கள் வீடமைப்புத் திட்ட(பிபிஆர்)த்தின்வழி மக்களுக்கு வீடுகள் கிடைப்பதற்கு உதவுகிறார்.

கடந்த தேர்தலில் நுருல், மூவாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பெரும்பான்மையில்தான் வென்றார். அந்த மூவாயிரத்தைப் பறிப்பது நொங் சிக்குக்கு சிரமமாக இராது.

ரிக் தியோ: மக்களுக்குப் பணம் கொடுக்கலாம், அன்பளிப்புகளை வழங்கலாம். ஆனால், அவர்களின் வாக்குகள் கிடைக்காது. 55 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் புத்திசாலிகள் ஆகிவிட்டார்கள், அவர்களை விலை கொடுத்து வாங்க முடியாது.

திறமையான வாக்காளன்: நுருலுக்கு பந்தாய் தொகுதியில் நல்ல பெயர். அவர்மீது ஒரு குற்றம்கூட சொல்ல முடியாது. பங்சார்/டமன்சாரா பகுதிகளில் அவரை குறை சொல்வார் எவருமில்லை.

டாக்: லெம்பா பந்தாய் மக்களிடம் ராஜா நொங் சிக்கைவிட நுருல் அதிக செல்வாக்கு உள்ளவராக இருக்கலாம். ஆனால், அம்னோ ஏமாற்றியாவது லெம்பா பந்தாய் தொகுதியைக் கைப்பற்றும். அதில்தான் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர்,  லெம்பா பந்தாய் வாக்காளர் பட்டியலில் சுமார் 10,000 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

விசயம் தெரிந்தவன்: லெம்பா பந்தாயில் ராஜா நொங் சிக்கைக் களமிறக்கி அம்னோவால் வெற்றிபெற முடியாது. ராஜா நொங் சிக்குக்கும் அத்தொகுதியில் அந்நாளைய எம்பி ஷரிசாட் அப்துல் ஜலிலுக்கும் நிறைய வேறுபாடு இல்லை என்பதைத் தொகுதிமக்கள் அறிவர். இவரும் தம் 25-வயது மகளின் பெயரில் பல மில்லியன் ரிங்கிட் குத்தகை ஒன்றைப் பெற்றவர்தானே.

அதனால்தான் அந்தப் பள்ளி நிகழ்வில்கூட குறைவான கூட்டமே கூடி இருந்தது.

அதிசயமான நால்வர்: அமைச்சர் என்பதற்காக பெற்றோர் மரியாதை கொடுத்து வந்திருந்தார்கள். ஆனால், இவைபோன்ற நிகழ்வுகளில் பிஎன் பிரதிநிதிகள் பேசுவதைப் பெற்றோர்கள் காதுகொடுத்துக் கேட்பதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன்.

மக்களின் பொதுவான உணர்வு இதுதான் -அவர்கள் இனியும் ஏமாறத் தயாராக இல்லை.

 

 

TAGS: