டாக்டர் மகாதீர் மீண்டும் திசை திருப்புகிறார், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது முக்கியமல்ல

mahathir“தகுதி இல்லாத குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமையும் வாக்களிக்கும் உரிமையும் கொடுத்தது அப்போதும் தப்பு இப்போதும் தப்பு. அவ்வளவு தான்”

டாக்டர் மகாதீர்: அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டவர்கள் பிஎன் -னுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமில்லை

கொதிக்கும் மண்: அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்ட அந்தக் குடியேற்றக்காரர்கள் பிஎன் -னுக்கு வாக்களித்தார்களா இல்லையா என்பது பிரச்னையே இல்லை.

பிஎன் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்காக அவர்களுக்கு வாக்களிக்க உரிமை கொடுக்கப்பட்டதே இங்குள்ள பிரச்னை. அவ்வாறு செய்ததின் மூலம் அந்தக் குற்றவாளி நாட்டை மேலும் துண்டு போட்டதுடன் தேசத் துரோகத்தையும் செய்துள்ளார்.

அந்த நடவடிக்கையால்  நீண்ட கால அடிப்படையில் பாதிக்கப்படப் போவது மலாய் சமூகமாகும். அது மேலும் பிளவுபட்டு வெவ்வேறு நோக்கங்களையும் சிந்தாந்தகளையும் கொண்ட வெவ்வேறு இன வம்சாவளிகளைக் கொண்ட மக்களாக சிதறும்.

புதிதாக உருவாக்கப்பட்ட அந்தக் குடி மக்களுடைய தலையாய நோக்கம், இந்த நாட்டில் செல்வத்தைத் தேடி தங்களை வளப்படுத்திக் கொள்வதாகும். அவர்களுக்கு புறப்பட்டு வந்த நாட்டில் சிறப்புச் சலுகைகளோ, பாதுகாப்போ கிடையாது.

இந்த நாட்டில் வாழ்வு ஆதாரத்தைத் தேடிக் கொள்வதற்கு அவர்கள் மன உறுதியுடன் போராடுவர். அப்போது முன்னேறுவதற்கு யாருக்கு அதிகமான வாய்ப்பு ? அவர்களுக்கா அல்லது அதிகம் ஊட்டப்படுகின்றவர்களுக்கா ?

பேஸ்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்னொரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். தயவு செய்து அடிப்படைப் பிரச்னையிலிருந்து திசை மாற வேண்டாம்.

தகுதி இல்லாத குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமையும் வாக்களிக்கும் உரிமையும் கொடுத்தது அப்போதும் தப்பு இப்போதும் தப்பு. அவ்வளவு தான். அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது பிரச்னையே அல்ல.

தோலு: கையும் களவுமாக பிடிபட்ட மனிதரைப் போன்று அவர் சபாவில் நடந்த வாக்களிப்புக்கு குடியுரிமைஊழல் குறித்த தமது கதைகளை மாற்றுகிறார், திசை திருப்புகிறார்.

மக்கள் தாம் எண்ணுவது போல முட்டாள்கள் அல்ல என்பதை அவர் உணர வேண்டும்.

முஷிரோ: அந்தக் குடியேற்றக்காரர்கள் பாஹாசா மலேசியாவைப் பேசியதால் தகுதி பெற்றனர் என முதலில்சொன்னார்.

இரண்டாவதாக 1957ம் துங்கு அப்துல் ரஹ்மானும் அதனையே செய்தார் என நியாயம் கற்பிக்க முயன்றார்.

மூன்றாவதாக அப்போதைய துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

இப்போது அதனால் எதிர்க்கட்சிகள் நன்மை அடைந்ததாகக் கூறுகிறார்.

அவர் 101 காரணங்களைச் சொல்லலாம். ஆனால் அவர் தம்மையே பழி சொல்லிக் கொள்ள மாட்டார்.

அவர் எல்லா மலேசியர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விசாரணைக்கு உட்பட வேண்டும் என்பதே என் அறிவுரை.

டத்தோஸ்: அந்த திடீர் குடிமக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்திருக்கலாம் என மகாதீர் சொல்கிறார். நாம் என்ன பாலர் பள்ளியுடன் படிப்பை முடித்துக் கொண்டவர்கள் என அவர் எண்ணுகிறாரா ?

ஒஎம்ஜி!!: டாக்டர் மகாதீரின் 22 ஆண்டு கால இரும்புக் கர ஆட்சியில் நிகழ்ந்துள்ள பல ஊழல்களுக்கு எல்லாம் அன்னையைப் போன்றது இந்தத் தேசத் துரோகக் காரியமாகும். ஊழல், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது ஆகியவற்றை விட மிக மோசமானது அதுவாகும்.

13வது பொதுத் தேர்தலில் இந்த ஊழல் மலிந்த தேசத் துரோக அரசாங்கத்தை வாக்காளர்கள் வீழ்த்துவதற்கு அந்த விஷயம் ஒன்று மட்டுமே போதும்.

ஒஸ்கார் கிலோ: மகாதீர் காலமான பின்னரே மௌனமாக இருப்பார் என்றால் அது மிகவும் துரதிர்ஷ்டமாகும்.

.

TAGS: