“இசி நீண்ட காலமாக பிஎன் பக்கமே சாய்ந்துள்ளது, அதன் பிடியில் உள்ளது. அதனால் அது தூய்மையான, நியாயமான தேர்தல்களை நடத்தும் அரசமைப்பு பொறுப்பை நிறைவேற்றப் போவதில்லை”
சபா அரசு சாரா அமைப்பை பார்வையாளர் தகுதியிலிருந்து விலக்குங்கள் என பெர்சே கோரிக்கை
சின்ன அரக்கன்: 13வது பொதுத் தேர்தலுக்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சபா சீனர் சங்க சம்மேளனம் (FCAS) பிஎன் அரசாங்கத்துக்குப் பிரச்சாரம் செய்து முதலமைச்சர் மூசா அமானை ஆதரிக்குமாறு சபா சீனர்களைக் கேட்டுக் கொள்வது அபத்தமானது.
தேர்தல் பார்வையாளர்கள் 100 விழுக்காடு நடு நிலையாக இருக்க வேண்டும். தங்கள் கருத்துக்களிலும் எண்ணங்களிலும் நேர்மையாக இருக்க வேண்டும்.
FCAS பாரபட்சமான எண்ணத்தைக் கொண்டிருந்து பிஎன் அரசாங்கத்தை ஆதரிக்க விரும்பினால் சபாவில் தேர்தல் பார்வையாளர் நியமனத்தை அது ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. நாகரீகமற்ற வழிகளில் ‘அரசியல் விளையாடுவதற்கு’ அது இவ்வளவு தாழ்ந்து போக வேண்டாம்.
மூசாவை இவ்வளவு பாராட்டி சபா சீனர்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என FCAS விரும்பினால் அது ஒர் அரசியல் கட்சியாக மாறுவது பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். தேர்தலில் தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
FCAS தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் (இசி) உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்.
ஜேபிசுவாரா: ஒர் அரசியல் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சரை ஆதரிக்குமாறு FCAS மக்களைக் கேட்டுக் கொள்வது உண்மையில் அவருக்குப் பிரச்சாரம் செய்வதற்கு சமமாகும். அதனை இசி கண்டு கொள்ளாமல் இருந்தால் அது மிகவும் கொடுமையானதாக இருக்கும்.
FCAS தலைவர் மூசாவுக்குப் பிரச்சாரம் செய்யும் போது அந்த அமைப்பு எப்படி நடுநிலையான பார்வையாளராக விளங்க முடியும் ? அந்த விஷயம் மீது இசி மௌனம் சாதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
லவர் பாய்: சபா அரசியல் ஏற்கனவே குழம்பிப் போயிருக்கிறது. தேர்தல் பார்வையாளரின் பங்கு என்றால் என்ன என்பதை இசி புரிந்து கொள்ளவில்லை. தேர்தல் தூய்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதைக் கண்காணிப்பதே பார்வையாளரின் கடமையாகும்.
FCAS இடைக்காலத் தலைவர் டிசி கோ, மூசா அமானுக்கும் பிஎன் -னுக்கும் பிரச்சாரம் செய்வது அவர் பாரபட்சம் காட்டுவதை தெளிவுபடுத்தியுள்ளது. அதனால் பார்வையாளராக இருப்பதற்கு அவருக்குத் தகுதி இல்லை.
சபா மக்களே விழித்துக் கொள்ளுங்கள். உங்கள் உரிமைக்கு போராடுங்கள். ஊழல் மலிந்த பிஎன் அரசாங்கத்தை விரட்டி உங்கள் கௌரவத்தை நிலை நிறுத்துங்கள். ஊழலுக்கு இறுதி முடிவு கட்டுங்கள்.
லாம்போர்கினி: தாமும் FCAS-ம் சீன சமூகத்தை பிரதிநிதிப்பதாக கோ எண்ணிக் கொண்டிருக்கிறார். கொழுத்த குத்தகைகளையும் வர்த்தக அனுமதிகளை நிலையாக வைத்திருக்கவும் அரசியல்வாதிகளுக்கு மண்டியிடும் சீன இசி-யைப் போன்று தேர்தல் பார்வையாளர்களும் பிஎன் சட்டைப் பைக்குள் வணிகர்களைக் கொண்ட சிறிய அமைப்பே அதுவாகும்.
அரசாங்கத்துக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் ஒர் அமைப்பை இசி நியமிப்பது நெறி தவறியது. நேர்மையற்றது.
தேர்தலில் நடுநிலை, நியாயம், தூய்மை என்பது பற்றி இசி தலைவருக்கு புரியவே இல்லை. அல்லது இசி நீண்ட காலமாக பிஎன் பக்கமே சாய்ந்துள்ளது, அதன் பிடியில் உள்ளது. அதனால் அது தூய்மையான, நியாயமான தேர்தல்களை நடத்தும் அரசமைப்பு பொறுப்பை நிறைவேற்றப் போவதில்லையா ?
முஷிரோ: இசி-யின் நேர்மை. கௌரவம் ஆகியவை மீது சந்தேகம் எழுந்துள்ளது. FCAS-சை தேர்தல் பார்வையாளராக இசி நியமித்துள்ளது அம்னோ, மசீச, மஇகா ஆகியவற்றைத் தேர்தல் பார்வையாளராக நியமிப்பதற்குச் சமமாகும். அதனை இசி செய்தால் கூட ஆச்சரியப்பட வேண்டாம்.
விஜார்ஜ்மை: இசி-யைப் பொறுத்த வரையில் தேர்தல் விதிமுறைகள் பெர்சே-க்கும் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் மட்டுமே பொருந்தும். மற்றவர்கள் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம்.