பினாங்கு மக்களைக் கவருவது -நஜிப், ரோஸ்மா பாணி

najibஅந்தத் திடலில் பின்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் சொன்னதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் செவிமடுத்திருந்தால் அவர் நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருப்பார்.

பினாங்கு ஹான் சியாங் கல்லூரி திடலில் நிகழ்ந்த அந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பேசிய நஜிப், கொரிய பாப் இசைக் கலைஞருடைய நிகழ்வைக் காண எல்லோரும் காத்துக் கொண்டிருப்பதால் தாம் நிறையப் பேச விரும்பவில்லை என்றார்.

“நீங்கள் Psy-க்கு தயாரா ?” என அவர் நான்கு முறை வினவிய போது கூட்டத்தினர் ‘ஆமாம்’ எனப் பதில் அளித்தனர்.

அடுத்து அவர் “நீங்கள் பிஎன் -னுக்கு தயாரா ?” என கேட்டார். ஆனால் பின்னால் இருந்த கூட்டத்தினர் ‘இல்லை’ என மறுமொழி அளித்ததுடன் சிரித்தும் விட்டனர்.najib1

அந்தக் கல்லூரி பல்கலைக்கழகக் கல்லூரி தகுதிக்கு உயர்த்தப்படும் என அறிவித்த போது நஜிப், ஹான் சியாங் என்னும் வார்த்தையை ‘ஹான் நியாங்’ என உச்சரித்த போதும் கூட்டத்தினர் சிரித்தனர்.

சீனப் புத்தாண்டு பாடலைப் பாடுமாறு நஜிப் மனைவி ரோஸ்மா மான்சோரை அறிவிப்பாளர் அழைத்த போதும் கூட்டத்தினர் சிரித்தனர்.

அவருடம் சுற்றுப்பயண அமைச்சர் இங் யென் யென் உட்பட பல பிஎன் தலைவர்களும் சேர்ந்து கொண்டனர்.

மண்டரின் மொழியில் உரை

நஜிப் பேசுவதற்கு முன்னர் அவருடைய புதல்வர் ‘Jiping’ மண்டரின் மொழியில் உரையாற்றினார்.

najib2நஜிப் தமது உரையை  “Lu ho bo? Lu bo ho? ( ஹொக்கியன் மொழியில் நீங்கள் நன்றாக இருக்கின்றீர்களா ?)  என்ற வாசகத்துடன் தொடங்கினார்.

அவர் ஒரே மலேசியா என உரத்த குரலில் சொன்னதுடன் அங்கு இருந்த முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்காக கை தட்டுமாறும் கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.

தாம் இது வரை செய்திராத- சீனப் புத்தாண்டை பினாங்கு மக்களுடன் கொண்டாட முடிந்தது கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் சொன்னார்.

“எனக்கும் என் மனைவிக்கும் என் குடும்பத்துக்கும் உற்சாகமான, கனிவான வரவேற்பை வழங்கிய உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

“நாங்கள் இங்கு உங்களுக்காக வந்துள்ளோம். பினாங்கை கீழ் திசை நாடுகளின் முத்தாக திகழச் செய்யவும் எதிர்காலத்தில் பினாங்கிற்கு சிறந்ததை வழங்கவும் நாங்கள் முனஒவோம்.”

“எல்லா மலேசியர்களையும் பரிவுடனும் நியாத்துடனும் அரவணைத்துச் செல்லும் அரசாங்கம் இதுவாகும்.  எதிர்காலத்துக்கு உண்மையான திட்டங்களை அது வைத்துள்ளது,” என அவர் வலியுறுத்தினார்.najib3

மலேசியா கடந்த நான்கு ஆண்டுகளில் பல உண்மையான மாற்றங்களைக் கண்டுள்ளது என்று கூறிய நஜிப், இந்த நாட்டை 2020ல் மேலும் சிறந்த உண்மையில் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு பிஎன் -னுக்கு ஒரு வாய்ப்பை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் இங்கு வந்துள்ள மக்கள் சொல்வதை செவிமடுக்க விரும்புகிறோம். நான் இங்கு வந்ததின் மூலம் மக்களுக்கு நான் செவி சாய்க்கிறேன். தாங்கக் கூடிய விலையில் வீடுகள் வேண்டும் என நீங்கள் விரும்பினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தாங்கக் கூடிய விலையில் 20,000 வீடுகளை பினாங்கில் கட்டுவதாக நானும் பிஎன் -னும் வாக்குறுதி அளிக்கிறோம்.”

பினாங்கு எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்னைகளைத் தீர்க்க மொனோரயில் திட்டத்தை அமலாக்குவதாகவும் நஜிப் வாக்குறுதி அளித்தார்.

இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர்,” “janji di tepati and insya Allah, நாங்கள் வழங்குவோம்,” என முடித்தார்.

 

TAGS: