“அந்த நிகழ்வு அரசியல் சார்பற்றது எனப் பிரதமர் சொன்னதாக எனக்கு நினைவிருக்கிறது. அப்படி இருக்கும் போது பிஎன் -னுக்கு தயாரா என அவர் ஏன் கூட்டத்தினரைக் கேட்க வேண்டும் ?”
பிரதமர் கேட்கிறார்: “நீங்கள் பிஎன் -னுக்குத் தயாரா ?” என்று. கூட்டம் சொல்கிறது ‘இல்லை !’ என. (VIDEO)
அர்த்தோங் பினாங்கு: அந்த பிஎன் அபத்தத்துக்கு எதிராக எழுந்து நின்று குரல் கொடுத்த பினாங்கு மக்கள் குறித்து நான் பெருமை கொள்கிறேன். Psy -யையோ Psy இல்லையோ பினாங்கு மக்கள் பிரதமர் எழுப்பிய வினாவுக்கு மூன்று முறை ‘இல்லை’ என உரத்த குரலில் சொல்லி ‘வாக்களித்து’ விட்டனர்.
நஜிப் ரசாக் அவர்களே சீன உடைகளை அணிந்து கொண்டு ஹொக்கியானிலும் மண்டரினிலும் சில சொற்களைச் சொல்லுவது, பினாங்கு மக்களுடைய உள்ளத்தைக் கவரப் போவதில்லை. அனைத்து மலாய்க்காரர் அல்லாதாரையும் மரியாதையுடன் நடத்துவது தான் அவர்களை ஈர்க்கும்.
ஸ்டார்ர்: தமது அறைகூவலுக்கு மக்கள் கொடுத்த பதிலை நஜிப் செவிமடுத்திருக்க மாட்டார் என நான் பந்தயம் கட்ட முடியும். ஏனெனில் பல தேசியப் பிரச்னைகள், தனிப்பட்ட ஊழல்கள், இன அத்துமீறல்கள், சமய வெறி ஆகியவை மீது அவர் “காது கேளாதவராகவும் வாய் பேசாதவராகவும்” இருந்து வருகிறார்.
அம்னோ/பிஎன் இறுதியில் அஸ்தமனமாவதை Psy-யால் கூடத் தடுக்க முடியாது என்பதை அவர் இப்போது உணர்ந்திருக்க வேண்டும். Psy பிரபலப்படுத்தும் ஒரு பாடல் பல தசாப்தங்களாக தொடரும் ஒர் ஊழல் ஆட்சியின் நிர்வாக முறைகேடுகளை மறைத்து விடாது.
நாட்டைப் பாதிக்கின்ற பிரச்னைகள் மீது “காது கேளாதவராகவும் வாய் பேசாதவராகவும்” இருக்குமாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நஜிப்புக்கு கொடுத்துள்ள அறிவுரை உண்மையில் பொறுப்பற்றதாகும். இந்த நாட்டின் தலைவருக்கு அது அழகல்ல. அது பேரிடருக்கே வழி வகுக்கும்.
மாற்றம்: பினாங்கு மக்கள் கௌரவமாக நடந்து கொண்டுள்ளனர். வெளிப்படையாகவே பேசியுள்ளனர். அவர்கள் Psy நிகழ்வைக் காணச் செல்வர். நீங்கள் கொடுக்கும் ஆங் பாவ்-களை பெற்றுக் கொள்வர். ஆனால் நாங்கள் பிஎன் -னை ஆதரிக்கவில்லை என அவர்கள் உங்களிடம் நேரடியாகவே சொல்லிவிடுவார்கள்.
அவர்கள் நிலையை அறிய இன்னொரு முறை சிந்திக்கவே வேண்டாம்.
அஜிகோர்: அந்த நிகழ்வு அரசியல் சார்பற்றது எனப் பிரதமரும் துணைப் பிரதமரும் பிஎன் தலைவர்களும் சொன்னதாக எனக்கு நினைவிருக்கிறது. அப்படி இருக்கும் போது பிஎன் -னுக்கு தயாரா என அவர் ஏன் கூட்டத்தினரைக் கேட்க வேண்டும் ?
பார்வையாளன்: “எல்லா மலேசியர்களையும் அரசாங்கம் பரிவுடன் கவனித்து நியாயமாக நடந்து கொண்டு எல்லோரையும் அரவணைத்துச் செல்கிறது,” என நஜிப் சொன்ன போது அவர் வழக்கம் போல அபத்தமாக பேசுகிறார் என்றும் தமது கட்சி மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்கும் பொருட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்றும் நான் கருதினேன்.
மருட்டல்களுக்கும் மோசமான பாரபட்சத்திற்கும் இலக்கான சிறுபான்மை இனங்கள் பிஎன் மீது வெறுப்படைந்து விட்டனர்.
மகாதீர், அப்துல்லா அகமட் படாவி, சையட் ஹமிட் அல்பார் போன்ற அரசமைப்பு மலாய்க்காரர்களும் பல அம்னோபுத்ராக்களும் அதிகாரத்தில் தொடரவும் நாட்டை கொள்ளையடிக்கவும் அரசியல் ஆதரவைப் பெற இன, சமய கார்டுகளை பயன்படுத்துவதை பல சுதேசி மலாய்க்காரர்கள் உணர்ந்து விழித்துக் கொண்டு விட்டனர்.
அதற்கு மாற்று ஊடகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். வாரம் ஒன்றுக்கு ஒரு பில்லியன் ரிங்கிட் வீதம் பிஎன் தலைவர்களும் அவர்களுடைய சேவகர்களும் கொள்ளையடிப்பதை அவர்கள் அறிந்து கொண்டுள்ளனர். மகாதீர் பெரும்பாலும் 44 பில்லியன் ரிங்கிட்டைத் திருடியிருக்க வேண்டும்.
உங்கள் அடிச்சுவட்டில்: நான் அந்த வீடியோவை பார்த்தேன். அந்த Psy நிகழ்ச்சி 1 ரிங்கிட் 50 சென் கூட மதிப்பு இல்லாதது. (ஆனால் 1.5 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டது) மக்களை மதிமயங்கச் செய்யும் முயற்சியே தவிர இது வேறு ஒன்றுமில்லை.
அடையாளம் இல்லாதவன்_5fb: சில சமயங்களில் நான் நஜிப்புக்காக பரிதாபப்படுவது உண்டு. ஒரு மனிதர் மக்கள் நம்பிக்கையையும் கௌரவத்தையும் இழந்து விட்டால் இது போன்ற ‘இல்லை’ என்ற பதில்களைத் தான் எதிர்நோக வேண்டியிருக்கும். அந்தப் பதில்கள் நஜிப்புக்கு மட்டும் கிடைத்தது அல்ல. அம்னோ/பிஎன் -னுக்கும் அது தான் பதில்.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதை நஜிப் தள்ளிப் போடப் போகிறார். அவர் அந்த முதியவருடன் ஆலோசனை கலந்த பின்னர் அதன் தவணைக் காலம் முடிவதற்குக் கூட அனுமதிக்கலாம்.
கேஎஸ்என்: கூட்டத்தினர் இவ்வாறு பதில் சொல்லியிருக்க வேண்டும்: “ஆம், பிஎன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு நாங்கள் தயார்”