லிம் குவான் எங்: ‘இல்லை’ என்ற பதிலை நஜிப் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

limபிரதமர் நஜிப் ரசாக், கூட்டத்தினரை நோக்கி நீங்கள் பி என் -னுக்குத் தயாரா என வினவிய போது அதற்கான பதிலையும் எதிர்பார்த்திருக்க வேண்டும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார்.

ஆளும் கூட்டணி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என கேட்கப்பட்டிருந்தாலும் மக்கள் அழுத்தம் திருத்தமாக ‘இல்லை எனப் பதில் சொல்லியிருப்பார்கள் என்றும் அவர் சொன்னார்.

‘இல்லை’ என மக்கள் சொன்ன பதிலை நஜிப் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏனெனில் பிஎன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை,” என பினாங்கு டைம்ஸ் சதுக்கத்தில் நிகழ்ந்த டிஏபி சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொண்ட 3,000 பேரிடம் கூறினார்.

“பிரதமர் பொதுப் போக்குவரத்து முறை பற்றியும் பேசினார். நான் கேட்கிறேன்: அது என்ன மறுசுழற்சி செய்யப்பட்ட செய்தியா ?”

பினாங்கு எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மோனோ ரயில் திட்டத்தை வழங்குவதாக

பிஎன் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் நஜிப் நேற்று வாக்குறுதி அளித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தாங்கக் கூடிய விலையில் 20,000 வீடுகளைக் கட்டித் தருவதாகவும் அவர் உறுதி கூறினார்.

ஹான் சியாங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அந்த உபசரிப்பில் நஜிப் தொடுத்த கேள்விக்குக் கூட்டத்தினர் அளித்த பதிலை வெளியிட்டுள்ள  ஒரே ஒரு நாளேடான மலாய் மெயில் ஆங்கில நாளேட்டை லிம் பாராட்டினார்.

மற்ற நாளேடுகள் அதனை வெளியிடும் எனத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சொன்னார். என்றாலும் பல சீன மொழி ஏடுகள் தங்கள் செய்திகளில் அதனைக் குறிப்பிட்டுள்ளன.

சுதந்திரம் பெற்றது முதல் தான் வைத்திருக்கும் அதிகாரத்தை தொடர்ந்து வைத்திருக்க பிஎன் எண்ணியுள்ளதால் அடுத்த பொதுத் தேர்தல் டிஏபி-க்கும் பக்காத்தானுக்கும் கடுமையானதாக இருக்கும் என்றும் லிம் எச்சரித்தார்.

பிஎன் வரும் தேர்தலில் இன, சமயப் பிரச்னைகளைத் தூண்டுவதோடு பொய்களையும் பரப்பலாம் என்றும் அவர் சொன்னார்.

LIM2பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகாவின் குடியுரிமையைப் பறிப்பதற்காக கூட்டரசு அரசமைப்பைத் திருத்துவதற்கு உதவியாக பிஎன் -னுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வழங்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டையும் லிம் சாடினார்.

“நாம் பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுத்தால் இது தான் நமக்குக் கிடைக்கும். பிஎன் -னை விரட்டுவதற்கு இதுவே தக்க தருணம். குடியுரிமை நமது அடிப்படை உரிமை.”

“அம்பிகா இந்தியர் என்பதால் நீங்கள் அதனைச் சொல்லக் கூடாது. நான் சீனர் என்பதால் நீங்கள் அதனை என்னிடமும் சொல்லக் கூடாது.”

 

TAGS: