உங்கள் கருத்து: இக்காட்டான சூழ்நிலை மகாதீருக்குத்தான், மலாய்க்காரர்களுக்கு அல்ல

umno“அவர் செய்த காரியங்களையும் அவர் பேசிய வார்த்தைகளையும் பார்க்கும் போது அவர் பிரிட்டிஷ் காலனித்துவாதிகளப் போன்று மலாய்க்காரரே அல்ல.”

மகாதீரும் அவருடைய ‘இக்காட்டான மலாய் நிலையும்

தேஹாசாப்பி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எவ்வளவுதான் வருத்தப்பட்டாலும் கவலைப்பட்டாலும் அவருக்கு உண்மையான அன்றாட மலாய் வாழ்க்கை முறையுடனும் மனப்பாங்குடனும் பண்புகளுடனும் தொடர்பே இல்லை. பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளுக்கும் சாதாரண மலாய் மக்களுக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளியைப் போன்றதுதான் அது.

முதலாவதாக அவர் இந்த நாட்டு மக்கள் உண்மையில் தங்கள் உள்மனதில் வைத்துள்ள நம்பிக்கைகளை புரிந்து கொள்ளாமல் தம்மை முழு சமூகத்தின் பேச்சாளராகக் காட்டிக் கொள்கிறார்.

தமது உலகக் கண்ணோட்டத்தை மக்கள் ஏற்க வேண்டும் என அவர் விரும்புகிறார். ஆனால் நாம் உண்மையான வாழ்க்கையை வாழ்வதால் நமக்குத்தான் அது நன்றாகத் தெரியும். வேலையாட்கள் நிறைந்த தங்கக் கோபுரத்தில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் நமது சமூகத்தின் தலைவர் அல்ல. நாம் அதனைப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

அவர் செய்த காரியங்களையும் அவர் பேசிய வார்த்தைகளையும் பார்க்கும் போது அவர் பிரிட்டிஷ் காலனித்துவாதிகளப் போன்று மலாய்க்காரரே அல்ல.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் என்ன தவறுகள் செய்திருந்தாலும் அவர் உண்மையான மலாய்க்காரர். மக்களுடன் இணைந்து கொள்ளும் ஆற்றலைக் கொண்டவர். ஒரே மக்கள் என்ற முறையில் அவர் நமது பண்புகளுக்குப் போராடுகிறார்.

அடையாளம் இல்லாதவன்_5fb: அவர் சொல்லும் இக்கட்டான மலாய் சூழ்நிலை மலாய்க்காரகளுக்கு அல்ல, அவருக்கு. மகாதீர் உச்ச வல்லமை படைத்த இனத்தை அதாவது தமது பாணியிலான ‘மலாய்க்காரர்களை’ அரசியல் அதிகாரம் வழி உருவாக்க முயன்றார்.

அதனால்தான் நாம் அம்னோ ஆட்சியில் சுலோகங்களையே காண்கிறோம். அவரது ஆட்சியிலும் அடுத்து  அப்துல்லா அகமட் படாவி, நஜிப் அப்துல் ரசாக் ஆட்சிகளிலும் அவை தொடர்ந்தன.

சுலோகங்கள் அடுத்தடுத்து வெளியிடப்படுகின்றன. அவற்றைக் கேட்பதற்கு இனிமையாகத் தான் இருக்கிறது.

ஆனால் எந்த அர்த்தமும் இல்லாதவை. இக்கட்டான மலாய் சூழ்நிலை எனச் சொல்வது பொருந்தாது. அது இக்கட்டான மகாதீர்/அம்னோ சூழ்நிலை எனச் சொல்வதே நியாயமானது.

என்னைப் பொறுத்த வரையில் அது மலாய்க்காரர்களுக்கு அவமானமாகும். ஏனெனில் அது அரசமைப்பு மலாய்க்காரர்களை அம்னோவுக்குள் கொண்டு வந்து விட்டது.

ரா: இணையத்துக்கு முந்திய 1970களிலும் 1980களிலும் ஏன் 1990களிலும் கூட தமக்கு நல்ல பலன் தந்த பழைய தந்திரங்களையே மகாதீர் இன்னும் நம்பியிருப்பதாகத் தோன்றுகிறது.

மலாய்க்காரர்கள் உட்பட பெரும்பாலான மலேசியர்கள் அவருடைய தந்திரங்களை உணரத் தொடங்கி விட்டனர்.

என்றாலும் அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிகாரத்தில் நிலைத்திருக்க அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.

அடையாளம் இல்லாதவன்_3e86: மகாதீர் அத்தகைய விஷமத்தனமான அறிக்கைகளை ஏன் வெளியிடுகிறார்என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அச்சம் அவரைச் சூழ்ந்துள்ளது.

வரும் தேர்தலில் அம்னோ/பிஎன் புத்ராஜெயா கட்டுப்பாட்டை இழக்கும் என அவர் பயப்படுகிறார்.

மக்களிடையே இன வெறுப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து விட்டது.

வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் அவர் லாலாங் நடவடிக்கைக்கு ஆணையிட்டு எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விடுவார். அவர் விரக்தி அடைந்துள்ளதையே அவரது அறிக்கைகள் காட்டுகின்றன.

டாக்: மகாதீர் நீண்ட கால வாழ வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். அப்போது தான் அவர் அம்னோ சிதறுவதைக் காண முடியும். தமது முறைகேடுகள் அம்பலமாவதை அவர் பார்க்க முடியும். தமது  வாரிசுகள் மலேசிய அரசியல் களத்திலிருந்து மறைவதையும் அவர் காண முடியும்

தீய எண்ணம் கொண்ட ஒரு பிசாசுக்கு அதுவே பொருத்தமானதாக இருக்கும்.

TAGS: