உங்கள் கருத்து: ‘இப்ப…. தொகுதி கேட்பீங்க, அப்புறமா அமைச்சர் பதவி கேட்பீங்க’
இடக் கோரிக்கையால் இண்ட்ராப்-பக்காத்தான் பேச்சுகளில் முட்டுப்பாடு.
பெயரிலி #47497449: அச்செய்தி உண்மையாக இருந்தால் இண்ட்ராப் செய்வது நியாயமல்ல. அது அதன் செயல்திட்டம் பற்றியும் இந்தியர் உரிமை பற்றியும் பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். இடக் கோரிக்கை பற்றிப் பேசக் கேட்டதில்லை.
நான் நினைக்கிறேன்… இண்ட்ராப் பிரதமர் நஜிப்புடன் பேசுவது நல்லது- அவர் ஒருவேளை இண்ட்ராபின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடும்.
அம்பலம்: டெரென்ஸ் நெட்டோ கூறியிருப்பது உண்மையாக இருந்தால் அது வருந்தத்தக்கது. இப்ப… தொகுதி கேட்பீங்க…. அப்புறமா அமைச்சர் பதவி கேட்பீங்க.
தேவ் ஆனந்த் பிள்ளை: இது நியாயமற்ற ஒரு கோரிக்கை. இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்கு நஜிப் ஒத்துக்கொண்டால் இண்ட்ராப் பேசாமல் பிஎன்னையும் மஇகாவையும் ஆதரிக்கலாம்.
ஒன்றை இண்ட்ராப் உணரத் தவறிவிட்டது. இந்தியர்களின் வாக்குகள் கிடைத்தாலுல் கிடைக்காவிட்டாலும் மாற்றம் ஏற்படப்போவது உறுதி.
கேஜென்: இண்ட்ராபின் பேராசையைத்தான் காண்பிக்கிறது. ஏன் இண்ட்ராப் போய் நஜிப்பிடம் இடங்கள் கொடுங்கள் என்று கேட்க வேண்டியதுதானே? இந்த அமைப்பு, (இண்ட்ராப்) டெரன்ஸ் நெட்டோ கூறுவதுபோல், தன் தலைவர்களின் நன்மைக்காக யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களிடம் இந்தியர்களின் நலனை விற்கப் பார்க்கிறது.
இண்ட்ராப் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்ட இந்திய ஏழை மக்களுக்காகக் கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை. இனத்துக்காகப் போராடுவதாகச் சொல்வதெல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக ஆடப்படும் ஆட்டம்போல் ஆகிவிட்டது.
ஜெடை: இன்னொரு எஸ்.சாமிவேலு கட்சி நமக்குத் தேவையில்லை. தங்களுக்கு அரசியல் நோக்கம் இல்லை, ஏழை இந்தியர்களின் நலனுக்குப் போராடுவதுதான் குறிக்கோள் என்றார்கள். இப்போ தேர்தலில் போட்டியிட ஒரு டஜன் இடங்கள் தேவை என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.
சிங்கராஜா: இது உண்மையாயின் நட்டப்படப்போவது இண்ட்ராப்தான். அதனால் இந்தியர்களின் நிலை மேலும் மோசமடையலாம்.
சோலாரிஸ்: இந்தக் கட்டத்தில் இண்ட்ராப் இடங்களுக்குக் கோரிக்கை விடுவது முறையல்ல. இடங்கள் தேவை என்றால் உழைத்துத்தான் பெற வேண்டும்.
பக்காத்தான் இக்கோரிக்கையை நிராகரிக்க எல்லா உரிமையும் உண்டு. ஆனால், இண்ட்ராபின் ஆறு-அம்சக் கோரிக்கையை நிராகரிக்க அதற்கு எக்காரணமும் இருக்க முடியாது. ஏனென்றால் அது எல்லா மலேசியர்களுக்குமே நன்மை அளிக்கக்கூடியது.