டோங் ஜோங் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் பிரதமருடைய ‘அன்பளிப்புக்கள்’ ஏதும் இருக்காது

najibடோங் ஜோங் என அழைக்கப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் நாளை நடத்தும் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்து கொள்வது முதன் முறையாக இருந்த போதிலும் அவர் அந்த சீனக் கல்வி போராட்டத்துக்கு எந்த அன்பளிப்பையும் கொண்டு செல்ல மாட்டார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு பிரதமருடைய அரசியல் செயலாளட் வோங் நாய் சீ (Wong Nai Chee) கூறுவதாக சைனா பிரஸ் நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த பொது உபசரிப்பு நிகழும் நியூ எரா கல்லூரியில் ( டோங் ஜோங் அந்த தனியார் கல்லூரியை அமைத்துள்ளது) 30 நிமிடங்களுக்கு இருக்கும் போது எந்த அன்பளிப்புக்களையும் விநியோகம் செய்ய மாட்டார் என்றும் வோங் சொன்னார்.

என்றாலும் எதிர்பாராத வகையில் நஜிப் உடனடியாக அறிவிப்புச் செய்வாரா என்பது தமக்கு நிச்சயமாகத் தெரியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் உள்ள 60 சீன சுயேச்சை உயர்நிலைப் பள்ளிக்கூடங்களாக நடத்தி வரும் ஐக்கிய தேர்வுச் சான்றிதழ் (UEC) தேர்வுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு டோங் ஜோங்கும் மற்ற சீனக் கல்வி அமைப்புக்களும் போராடி வருகின்றன.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா போன்ற பல நாடுகள் அந்த UEC சான்றிதழை நுழைவுத் தகுதியாக ஏற்றுக் கொண்ட போதிலும் மலேசிய அரசாங்கம் அதனை அங்கீகரிக்கவில்லை.

அந்த UEC சான்றிதழை அங்கீகரிக்குமாறு உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக சின் சியூ நாளேடும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அம்னோவில் தாராளப் போக்குடையவர் எனக் கருதப்படும் சைபுதின், அத்தகைய அங்கீகாரம் வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சீனர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும் என அவர் சொன்னார்.

“தேசியக் கல்விக் கொள்கைக்கு இணங்க UEC பாடத்திட்டத்தில் சில திருத்தங்களை அரசாங்கம் கோருவதாக நான் அறிகிறேன்.”

“ஆனால் அங்கீகாரத்துக்குப் பின்னர் அதனைச் செய்யலாம். அரசாங்கம் ஏ நிலை (A-level) சான்றிதழை அங்கீகரிக்கும் போது ஏன் UEC  சான்றிதழை ஏற்றுக் கொள்ளக் கூடாது ?” என அவர் வினவியதாகவும் சின் சியூ செய்தி குறிப்பிட்டது.

 

TAGS: