“இந்த நாடு குழப்பத்தில் மூழ்கும் அபாயம் இருந்தாலும் கூட, அதிகாரத்தை என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தை தக்க வைத்துள்ள நஜிம் போராடுகிறார் என்பதையே அந்த நடவடிக்கை காட்டுகின்றது”
மே 13 திரைப்படம் பெல்டா குடியேற்றக்காரர்களுக்குக் காட்டப்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்
கைரோஸ்: பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மட்டும் மே 13 திரைப்படத்தைக் காட்டுவது என்ற பாரபட்சமான முடிவு, பிஎன் கடைப்பிடிக்கும் இனவாதத்தில் இறுதிக் காட்சியாகும்.
மலாய் வாக்குகளைத் தனக்கு ஆதரவாக திசை திருப்புவதற்கு இன அம்சத்தைப் பயன்படுத்த பிஎன் துணிந்து விட்டதையே அது காட்டுகின்றது.
அவ்வாறு செய்ததின் மூலம் மற்ற இனங்களுடைய உணர்வுகளை குறிப்பாக சீனர்களுடைய எண்ணங்களை அது பொருட்படுத்தவே இல்லை. அதன் விரக்தியையும் தீவிரவாதத்தையுமே அது எடுத்துக் காட்டுகின்றது. நவீன மயத்திற்குப் பாடுபடுவதாக தன்னை பறை சாற்றிக் கொள்ளும் ஒர் அரசாங்கத்துக்கு அது அழகல்ல. உண்மையில் வெட்கக்கேடு.
விஜய்47: நாட்டை வழி நடத்துவதற்கும் யாரையும் வழி நடத்துவதற்கும் தேவையான மன உறுதி நஜிப்பிடம் இல்லை. அரியணைக்குப் பின்னால் உண்மையான அதிகாரம் அவருடைய பேராசை கொண்ட மனைவியிடமே உள்ளது.
நஜிப்பின் தந்திரங்களும் தீய எண்ணங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் சிஷ்யர் என்பதை அவை தெளிவாகக் காட்டுகின்றன. இந்துக்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் தாம் அளித்த பல வாக்குறுதிகளையும் நம்பிக்கையையும் அவர் காப்பாற்றவில்லை.
உண்மையில் அவர் வாக்குறுதிகளை மறந்து விட்டதாகத் தோன்றுகிறது. அவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற அச்சமே அவரிடம் இல்லை.
வீரா: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் கோட்டை தங்கள் வசம் இருப்பதை உறுதி செய்ய அம்னோதொடர்ந்து பொய்களைச் சொல்வதோடு கதைகளையும் ஜோடிக்கும். அம்னோ விரக்தி அடைந்துள்ளதையே அது உணர்த்துகின்றது.
அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு அது ஆட்சியில் இருந்து நாட்டைத் துடைத்த ( sapu ) பின்னர் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறும். அதற்குப் பின்னர் நிதி அளவில் நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஏதும் இருக்குமா என்பது தெரியவில்லை.
ஒய்எப்: ‘எல்லாவற்றையும் தற்காக்கின்ற ஒருவர் எதனையும் தற்காப்பதில்லை’ என Fredrick the Great சொல்லியிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
நஜிப் இப்போது அதனைத் தான் செய்து கொண்டிருக்கிறார். மலாய்க்காரர்களுடைய ஆதரவைப் பெற அவர் பணத்தைச் செலவு செய்கிறார். அதனால் மலாய்க்காரர் அல்லாதார் வாக்குகளை இழக்கிறார். மலாய்க்காரர் அல்லாதாருடைய வாக்குகளைக் கவர அவர் பணத்தைக் கொட்டும் போது அவர் மலாய் வாக்குகளை இழக்கிறார்.
மலாய்க்காரர்களை மூளைச் சலவை செய்ய அவர் இப்போது அந்தத் திரைப்படத்தைக் காட்டுகின்றார். அதனால் அவர் மலாய்க்காரர் அல்லாதார் வாக்குகளை இழக்கிறார். ஆகவே நஜிப்-பின் நிலை தான் என்ன ? அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. தொடக்கத்தில் இருந்ததைப் போலவே இருக்கிறார். உண்மையில் மிகவும் முட்டாள்தனமான அரசியல் வியூகம் ?
நஜிப் ஆலோசகர்கள் மட்டும் முட்டாள்கள் அல்ல தமது அரசியல் அஸ்தமனத்துக்கு இத்தகைய வியூகம்
மேலும் வழி வகுக்கும் என்பதை உணரும் அளவுக்குக் கூட அவரிடம் மன ஆற்றலும் இல்லை. 13வது பொதுத் தேர்தலில் எதிர்பார்க்கப்படும் பெரிய தோல்விக்கு நஜிப் மீது பழி போட துணைப் பிரதமர் ஏற்கனவே தயாராகி வருகிறார்.
ஜனநாயகம்: தந்தையைப் போல மகன். ஒருவர் துங்குவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற ஒருவர் மே 13க்கு “சதித் திட்டம்” தீட்டினார். இன்னொருவர் தாம் அதிகாரத்தில் நிலைத்திருக்க தமது இனவாதத் தந்தை செய்ததையே செய்கிறார்.
சின்ன அரக்கன்: அமைச்சரவை முடிவுக்கு முரணாக எந்த அறிவிப்பும் இல்லாமல் பெல்டாகுடியேற்றக்காரர்களுக்கு மட்டும் அந்தத் திரைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது, பிஎன் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அம்னோ மரியாதை கொடுக்கவில்லை என்பதையே உணர்த்துகின்றது.
முதுலெலும்பும் துணிச்சலும் இல்லாத மசீச, மஇகா, கெராக்கான், பிபிபி தலைவர்களிடமிருந்து நாம் எதனை எதிர்பார்க்க முடியும் ? எதுவுமே இருக்காது. கடந்த 55 ஆண்டுகளாக இதே நிலைமை தான். மீண்டும் பிஎன் தேர்வு செய்யப்பட்டால் என்றென்றும் அதே நிலை தொடரும்.
பெண்டர்: சீனப் புத்தாண்டு நிகழ்வுகளில் அவர் ஒரே மலேசியா உணர்வுடன் கலந்து கொண்டது எல்லாம் வெறும் காட்சி தான் என மலேசியாகினி வாசகர்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
அனோன்: 1969ம் ஆண்டு கணினி மூலம் உருவாக்கப்பட்ட சுவரொட்டிகளில் எளிதாக்கப்பட்ட சீன எழுத்துப்படிவங்கள் ! நம்பவே முடியவில்லை.