ஜோகூரில் பிகேஆர் கட்சியுடன் டிஏபி நடத்தும் போராட்டத்தில் கர்பால், பூ-வை ஆதரிக்கிறார்

booஜோகூரில் டிஏபி-க்கு எதிராக அந்த மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த மாநில டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துள்ளார்.

ஜோகூரில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்புக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சுவா டிஏபி-க்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதாக பூ நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

பூ சொல்லியிருப்பதை டிஏபி கடுமையாகக் கருதுகிறது என்றும் டிஏபி-க்கு எதிராகத் தொடுக்கப்படும் ‘தாக்குதல்களுக்கு’ பின்னணியில் யார் இருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கர்பால் கேட்டுக் கொண்டார்.

“டாக்டர் பூ-வின் கருத்துக்களை அலட்சியம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்வாறு அலட்சியம் செய்வது பக்காத்தான் ராக்யாட் நலனுக்கு உகந்தது அல்ல,” என அவர் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.boo1

“சுவா ஜுய் மெங்-கின் நம்பகத்தன்மையும் கூட சந்தேகத்துக்குரியதாகும். ஏனெனில் பிஎன் -னில் ஒர் அங்கமான மசீச-வில் அவர் நீண்ட காலம் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு மசீச தலைவர் தேர்தலில் தோல்வி கண்ட அவர் நாடாளுமன்றத்தில் ஒர் இடத்தை பிடிக்க அவர் ஆர்வம் கொண்டிருப்பது நிச்சயம்.”

“சுவா செய்வது பக்காத்தான் ராக்யாட்டுக்கு எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்றால் அவர் செல்லும் பாதையை கண்காணிப்பது முக்கியமாகும். அதனை விரைவாக செய்வது நல்லது,” என்றும்  கர்பால் குறிப்பிட்டார்.

“எத்தகைய சதி நாச வேலைகளினால் அந்த முன்னணி மாநிலத்தில் பக்காத்தானுடைய வாய்ப்புக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தலையிட வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

TAGS: