பாலாவைச் சந்திக்கும் திட்டமில்லை என்கிறார் தீபக்

1deepakகம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், மலேசியாவுக்குத் திரும்பி இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகும் சுயேச்சை துப்பறிவாளர் (பிஐ) பி.பாலசுப்ரமணியத்தைச் சந்திப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

அதுவும் ஞாயிற்றுக்கிழமை பாலசுப்ரமணியம் நாடு திரும்பும்போது கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் சென்று தீபக் அவரைச் சந்திக்க மாட்டார்.

“இப்போதைக்கு அதற்கான திட்டம் எதுவும் இல்லை”, என்றாரவர்.

பாலசுப்ரமணியத்தை இரண்டாவது சத்திய பிரமாணம் செய்ய வைத்ததில் முக்கிய பங்காற்றியவர் தீபக்.

1altanபாலசுப்ரமணியம் 2008-இல் செய்த முதலாவது சத்திய பிரமாணத்தில் 2006-இல் துணைப் பிரதமராகவும் தற்காப்பு அமைச்சராகவும் இருந்த நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அல்டான்துனியாவுக்கும் தொடர்புண்டு என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா சம்பந்தப்பட்டக் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல்டான்துயா கொலைவழக்கைத் தாம் ‘கவனித்துக் கொள்வதாக’அப்போதைய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசன்  நஜிப்பிடம் கூறியதாகவும் பாலசுப்ரமணியம் அதில் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், அடுத்த நாள் இரண்டாவது சத்திய பிரமாணம் ஒன்றைச் செய்த அவர், முதல் சத்திய பிரமாணத்தை மீட்டுக்கொள்வதாகவும் அது நெருக்குதலின் காரணமாக செய்யப்பட்டது என்றும் கூறினார்.

கடந்த ஆகஸ்டில் பாலசுப்ரமணியம் மலேசியாவுக்கு வந்து திரும்பிச் சென்ற பின்னர், தீபக்- நஜிப் உறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து பாலாவின்  சத்திய பிரமாணம் தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளிவந்தன.

‘டான்ஸ்ரீ’ பட்டம் கொண்ட ஒரு வழக்குரைஞரும் அவரின் மகனும்தான் இரண்டாவது சத்திய பிரமாணத்தை வரைந்து கொடுத்தார்கள் என்று தீபக் கூறினார்.

TAGS: