தவறான தொடக்க மதிப்பீடுகள் உயிர்களை பலி கொண்டு விட்டன

sabah“அந்த படையெடுப்பின் கடுமையான நிலையை நமது அரசியல்வாதிகள் தொடக்கத்தில் தவறாக மதிப்பீடு செய்து விட்டனர். அதனால் அவர்கள் கரங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது”

நஸ்ரி: கம்போங் தண்டிவோ சம்பவம் ஒர் ஊடுருவலே போர் அல்ல

தே தாரேக்: பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்துள்ள மடத்தனமான அறிக்கை அதுவாகும். இருநூறுக்கும் மேற்பட்ட அந்நியர்கள் நமது மண் மீது படையெடுத்துள்ளனர். நஸ்ரி அதனை ஊடுருவல் என்கிறார்.

அவர்கள் இராணுவத்தை அனுப்புவதற்குப் பதில் போலீசை அனுப்பினர். வேறு எந்த நாட்டிலும் இது நிகழ்ந்திருந்தால் இராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அதனால் எட்டு போலீஸ் அதிகாரிகளுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அந்த படையெடுப்பின் கடுமையான நிலையை நமது அரசியல்வாதிகள் தொடக்கத்தில் தவறாக மதிப்பீடு செய்து விட்டனர். அதனால் அவர்கள் கரங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது.

ஸ்விபெண்டர்: நமது எல்லைகளில் நடத்தப்பட்ட ‘ஊடுருவல்’ போர் விமானங்கள், குழி பீரங்கிகள், இராணுவம் ஆகியவற்றைக் கொண்டு சமாளிக்கப்பட்டிருக்க வேண்டும். ‘படையெடுப்பு’ நிகழ்ந்திருந்தால் அதனை முறியடிக்க நமது ஆயுதப்படைகள் எத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கும் ? ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளிலிருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறிபடைகள் பாய்ச்சப்பட்டிருக்குமா ?

நாம் அனைவரும் முட்டாள்கள் என நமது அமைச்சர்கள் எண்ணுகின்றனர். அந்த “ஊடுருவல்காரர்கள்  (படையெடுப்பாளர்கள் அல்ல) தீவிரவாதிகளும் அல்ல பயங்கரவாதிகளும் அல்ல என நமது உள்துறை அமைச்சர் நமக்குச் சொல்கிறார். நமது எட்டு வீரர்களை இழந்த பின்னர் நமது இராணுவ, போலீஸ் படைத் தலைவர்கள், அந்த ஊடுருவல்காரர்கள் ‘எதிரிகள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர்.

நீல நிற அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டவர்களுடைய விசுவாசம் பற்றி நிச்சயமாகத் தெரியாது என அடையாளக் கார்டு திட்டத்தை வரைந்தவர் கூறுகிறார். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், முன்னாள் பிரதமர் உட்பட எல்லா அமைச்சர்களும் நாம் சிறுவர்கள் என எண்ணிக் கொண்டு பேசுகின்றனர்.

அந்த அடையாளக் கார்டு திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் விளைவுகளும் தாவ்சுக் போராளிகள் சபாவுக்குள் வந்து செல்வது பற்றி பாராமுகமாக இருந்ததும் நமது பயங்கரக் கனவுகள் தொடங்கியுள்ளதையே உணர்த்துகின்றன.

நமது கடந்த கால, நிகழ்கால நடவடிக்கைகளை நியாயப்படுத்த ஏன் சமயத்தைக் கொண்டு வரவேண்டும் ?

என்ன பெயர்: கம்போங் தண்டுவோ ‘சண்டை’ முடிந்தாலும் படையெடுப்புக்கு எதிரான ‘போர்’ இன்னும் ஒயவில்லை. எதிர்காலத்தில் அந்த ஊடுருவல்காரர்கள் தங்கள் வேலைகளைத் தொடரக் கூடும்.

படையெடுப்பு குறித்த அச்சம் இன்னும் உள்ளது. அவர்கள் சபாவில் ஆயுதங்களைச் சேகரித்து பதுக்கி வைத்துள்ளனர். எதிர்காலத்தில் அதனைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். மோரோ தேசிய விடுதலை முன்னணி போராளிகளுக்கு மலேசியா பயிற்சி அளித்துள்ளது. நாம் முதுகில் குத்தப்பட்டுள்ளோம்.

ரேடியோ: தலைமறைவுப் போர் இப்போது தான் தொடங்கியுள்ளது. நமது விமான நிலையங்களை எதிரிகள் தாக்கத் தொடங்குவர். நமது பொருளாதாரம் சீர்குலையும். மற்ற மாநிலங்களுக்கும் மாநகரங்களுக்கும் அது விரிவடையும். நம்மை பேச்சுக்களுக்கு இணங்குமாறு செய்வதே அவர்களுடைய நோக்கம்.

உணவு ஊட்டிய கரங்களையே அவர்கள் கடிக்கின்றனர். கடந்த காலத்தில் அம்னோ அவர்களுக்கு நிறைய செய்துள்ளது. இப்போது எட்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்படும் வரையில் அவர்களிடம் அரசாங்கம் தாராளமாக நடந்து கொண்டுள்ளது.

சிகேஎஸ்: அந்த ஊடுருவல்காரர்கள் ‘முழுமையாக’ தோற்கடிக்கபப்ட்டிருந்தால் அவர்களுக்கு ஏற்பட்ட உயிருடற்சேதத்தை மலேசியப் போலீசார் ஏன் இன்னும் உறுதி செய்ய முடியவில்லை ?

நாம் வாழ முடியும்: மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கும் பிலிப்பின்ஸ் அரசாங்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் கையெழுத்தாக நஜிப் நடுவர் பணியாற்றினார். அந்த ஒப்பந்தத்தில் சுலு இனம் விடுபட்டுப் போனது. அதனால் சுலு மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

மனக்குறைகளைத் தீர்த்துக் கொள்ள சுலு மக்கள் நடத்தும் போராட்டம் இதுவாகும் (அவர்கள் ஏற்கனவே ஏழைகள்) இந்தப் போராட்டத்தில் அவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் ஆவர்.

ஒடோக்: மலேசியாவில் பயிற்சி பெற்ற மோரோ போராளிகள் சபாவில் நிறைய ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இதனை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூட  எதிர்பார்த்திருக்க மாட்டார். 

நாம் விதைத்ததை நாம் அறுவடை செய்கிறோம். கிளர்ச்சிக்காரர்களுக்கு நாம் ஆயுதங்களையும் கொடுத்து பயிற்சியும் அளித்துள்ளோம். அவர்கள் திரும்ப வந்து நம்மை பயமுறுத்துகின்றனர். இன வம்சாவளி மக்கள் தொகையை அதிகரிக்க மகாதீர் வகுத்த திட்டம் கைமீறிப் போய் விட்டது.

சன்யிட்: பாகிஸ்தானியர்களைக் கேளுங்கள். அவர்கள் எப்படி தலிபான்களுக்கு பயிற்சி அளித்தனர் என்று ?  இப்போது தலிபான்கள் அவர்கள் மீதே ஜிஹாட்டை தொடுத்துள்ளனர். மோரோ தேசிய விடுதலை முன்னணி நாம் உருவாக்கியதாகும். அது நமக்கு எதிராக ஜிஹாட் தொடுத்துள்ளது.
——————————————————————————–

TAGS: