எந்த சண்டையிலும் உண்மைக்குத்தான் முதல் சேதம்

zahidநமது ஆயுத வலிமை மேலோங்கியுள்ளது. படையெடுப்பாளர்களை விட அதிக எண்ணிக்கையில் நாம் இருக்கிறோம். என்றாலும் நாம் ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்படுகிறோம். வீழ்த்தப்படுகிறோம்.”

9 சடலங்களும் வெள்ளிக் கிழமை மோதல்களுக்குப் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டவை என்கிறார் படைத் தளபதி

கைரோஸ்: உண்மையில் அவமானம். அரச மலேசிய ஆகாயப் படை செவ்வாய்க்கிழமையன்று நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலின் போது 12 பேர் கொல்லப்பட்டனர் என்னும் தவறான தோற்றத்தைத் தற்காப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் பக்கத்தில் இருக்கும் போது தந்துள்ளார்.

அந்தச் சடலங்கள் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியாதா ? எவ்வளவு தர்மசங்கடம் ? விரிவாக மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல்களில் அந்தத் தீவிரவாதிகள் கொல்லப்படவில்லை என்றால் அந்தத் தாக்குதலில் எந்தத் தீவிரவாதியும் இறக்கவில்லை எனக் கருதலாமா ? மீண்டும் அவமானம்.

மதிப்புமிக்க மலேசிய உயிர்கள் பலியாகும் வகையில் தொடர்ந்து தவறுகள் நிகழ்கின்றன. எப்படிப்பட்ட அமைச்சர்களும் ஜெனரல்களும் நமக்கு உள்ளனர் ?

நமது ஆயுத வலிமை மேலோங்கியுள்ளது. படையெடுப்பாளர்களை விட அதிக எண்ணிக்கையில் நாம் இருக்கிறோம். என்றாலும் நாம் ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்படுகிறோம். வீழ்த்தப்படுகிறோம். என்னதான் நடக்கிறது ?

எச்ஜேசிங்: அந்தப் படங்களை ரகசிய நிலையிலிருந்து அகற்றிய பின்னர் வெளியிடும் போது தற்காப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சரும் பத்திரிக்கையாளர்களுக்கு துல்லிதமான தகவல்களை சரியான முறையில் வழங்க இயலாமல் இருப்பது மிகவும் பரிதாபமாகும்.

அந்தப் படங்கள் தெளிவாக இல்லை என்றாலும் ஒரளவு அறிவையும் தெளிவாகப் பார்க்கக் கூடிய கண்களையும் கொண்டவர்களுக்கு அந்தச் சடலங்கள் 36 மணி நேரத்துக்கு முந்தியவை என்பது தெரிந்து விடும்.

அமைச்சர்கள் வாயைத் திறக்கும் முன்னர் அவர்களுக்கு விளக்கம் அளித்த பரிதாபத்துக்குரிய மனிதர் யார் ? தங்களுக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதை அமைச்சர்கள் காட்டி விட்டனர்.

அந்த அமைச்சர்கள் ஏன் சண்டை நிகழும் பகுதியில் இருக்க வேண்டும் ? அதனால் பாதுகாப்புப் படைகள் அமைச்சர்களைப் பாதுகாப்பதற்கும் உணவு அளிப்பதற்கும் தங்கள் வளங்களை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வேலைகளை முறையாகச் செய்ய முடியாமல் போகலாம்.

ஜென்2: அந்த இரண்டு அமைச்சர்களும் இனிமேல் நிருபர்களைச் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டு வீச்சுத் தாக்குதலில் அந்த 9 பேரும் கொல்லப்பட்டவர்கள் என்னும் தோற்றத்தைத் தர அவர்கள் முயன்றனர்.

அந்தச் சடலங்கள் மூன்று நாட்களுக்கு முந்தியவை என ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி சுல்கிப்லி முகமட் ஜின் கூறுகிறார். ஆகவே நாம் செம்பனை மரங்கள் மீது தான் குண்டு வீசினோமா ?

அடையாளம் இல்லாதவன்_3e93: தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடி அரசியல் விளையாடுகிறார்.  செவ்வாய்க்கிழமை குண்டு வீச்சில் யாரும் கொல்லப்படாத போது பல சுலு குண்டர்கள் கொல்லப்பட்டனர் என்னும் தோற்றத்தை அளிக்க அவர் முயன்றுள்ளார்.

நமது எப்18 ரக ஜெட் விமானங்கள் செம்பனை மரங்களையே தாக்கியுள்ளன.

பூஜாங் சென்னாங்: அந்தப் பிரச்னையிலிருந்து அரசியல்வாதிகள் விலகியிருப்பதே நல்லது. அவர்கள் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் நெருக்கடி மோசமடைகிறது ( அடையாளக் கார்டுகள், சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு வழங்கப்பட்டது பற்றி அவர்கள் வாயைத் திறந்த போது அது தான் நடந்தது) 

அந்த நிலைமையை கையாளுவதற்கு தகுதியானவர்கள் ஜெனரல்களே. அரசியல்வாதிகள் வெளியில் இருக்க வேண்டும்.

தேஹாசாப்பி: சிவிலியன் தளபதி நிபுணத்துவ வீரர்களுடைய யோசனைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்.  அதற்கு நேர்மாறாக அல்ல.

அடையாளம் இல்லாதவன்_4144: இராணுவம் தாக்குதலுக்குத் தயாராகும் வேளையில் கம்போங் தண்டுவோ-வில் பயங்கரவாதிகள் காத்துக் கொண்டிருப்பார்கள் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா ?

பீரங்கி: தலைமறைவுப் போருக்கான ஏற்பாடுகளையே நான் இங்கு காண்கிறோம். அந்தத் துப்பாக்கிக்காரர்கள் சிறிய குழுக்களாகப் பிரிந்து, ஆகாயத் தாக்குதல் தொடங்கும் முன்னரே இரவு நேரத்தில் பாதுகாப்பு வேலியைத் தாண்டிச் சென்று விட்டனர்.

அவர்கள் இப்போது உள்ளூர் மக்களுடன் இணைந்திருக்க வேண்டும். ஆகவே அதிகாரிகள் அவர்களைக் கண்டு பிடிப்பது மேலும் சிரமம்.
 
அபலாஸ்டின்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தயவால் சபாவில் இப்போது வாழும் நூறாயிரக்கணக்கான ஏன் மில்லியன் கணக்கான பிலிப்பினோ முஸ்லிம்களுடன் ஊடுருவல்காரர்கள் இப்போது இணைந்திருக்க வேண்டும்.

மலேசிய இராணுவம் தனது நடவடிக்கைகளை முடித்த பின்னர்  சபாவில் நீல நிற அடையாளக் கார்டுகளை வைத்துள்ள பிலிப்பினோக்களின் உதவியுடன் அந்தப் பயங்கரவாதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து தாக்குதலை தொடங்கக் கூடும்.

 

TAGS: