சபா மீது கலந்துரையாடல் தொடங்க வேண்டும் என ஐநா தலைமைச் செயலாளர் வேண்டுகோள்

Banசபாவில் வன்முறைகள் நிற்க வேண்டும் என்றும் மலேசியப் படைகளுக்கும் சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் மூண்டுள்ள பூசலை தீர்க்க கலந்துரையாடல் தொடங்க வேண்டும் என்றும் ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சபா நிலவரத்தை பான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் வன்முறைகள் பொது மக்கள் மீதும் குடியேற்றக்காரர்கள் மீதும் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து பான் அதிகம் கவலைப்படுவதாகவும் ஐநா இணையத் தளம் ஒன்றில் சேர்க்கப்பட்ட அறிக்கை ஒன்று கூறியது.

“எல்லாத் தரப்புக்களும் மனிதநேய உதவிகள் கொண்டு செல்லப்படுவதற்கு உதவுவதோடு அனைத்துலக மனித உரிமைக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொள்கின்றார்,” என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

1 copகடந்த மாதத் தொடக்கத்தில் சபா மீதான தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக சுலு சுல்தான் ஆதரவாளர்கள் பட்டத்து இளவரசர் அஸ்ஸிமுடி கிராம் தலைமையில் சபாவுக்குள் ஊடுருவினர்.”

மூன்று வார கால இழுபறிக்குப் பின்னர் கடந்த வெள்ளிக் கிழமை வன்முறைகள் மூண்டன. மலேசியப் படைகள் பெரிய அளவில் தாக்குதல் தொடுத்த போதிலும் வன்முறைகள் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.  இரு தரப்பிலும் இது வரை 30 பேர் கொல்லப்பட்டனர்.

மருத்துவ ஊழியர்களையும் மனித நேய உதவிப் பொருட்களையும் ஏற்றியிருந்த கப்பல் ஒன்றை பிலிப்பின்ஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அந்தக் கப்பல் சபாவில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அந்தப் பூசலில் தலையிடுமாறு ஐநா-வை சுலு சுல்தான் மூன்றாவது ஜமாலுல் கிராம் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார்.

-இண்டர் அக்சன்