சனிக்கிழமை போர்ட் கிள்ளானில் வேதமூர்த்தி

hindraf-க.சந்திரமோகன், ஹிண்ட்ராப் ஊடக தொடர்பாளர்.

ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தி தமது தொடர் உண்ணாவிரத பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு முன்னர் எதிர்வரும் சனிக்கிழமை, மார்ச்  9 ஆம் தேதி, போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் விளக்க கூட்டம் ஒன்றில் பொதுமக்களை சந்திக்கவிருக்கிறார்.

மலேசிய இந்தியர்கள் நெடுங்காலமாக சமூக, பொருளாதார துறைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டிருப்பதை நிரந்தர முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் ஹிண்ட்ராப் தயாரித்த ஐந்தாண்டு செயல்இதிட்ட வரைவிற்கு நாட்டின் இரு முக்கிய அரசியல் கூட்டணிகளும் மௌனம் சாதிக்கும் நிலையில் தமது அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை இந்த பொதுக் கூட்டத்தில் அவர் விளக்கவிருக்கிறார்.

1/8/2012 இல் நாடு திரும்பிய வேதமூர்த்தி நாடு முழுதும் பயணம் செய்து இந்தியர்கள் இந்நாட்டில் எப்படியெல்லாம் வஞ்சிக்கப் பட்டிருகிறார்கள் என்பதையும், எதையெல்லாம் இழுந்துள்ளார்கள் என்பதைப் பற்றியும் விளக்கமளித்து வந்துள்ளார். இந்த நிலையிலிருந்து இந்தியர்களை  மீட்கும் நோக்கில் ஹிண்ட்ராப் தாயரித்திருக்கும் ஐந்தாண்டு செயல்திட்டம் குறித்தும், அரசியல் கட்சிகள் ஏன் எழுத்துப்  பூர்வமாக  அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அவசியத்தையும் மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளார்.

அந்த தொடர்பயணத்தின் மேலுமொரு விளக்கக் கூட்டமாக எதிர்வும் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு போர்ட் கிள்ளான் வட்டார இந்தியர்களை அவர் திருவள்ளுவர் மண்டபத்தில் சந்திக்க விருக்கிறார்.

சுற்று வட்டார மக்கள் இந்த விளக்கக் கூட்டத்திற்கு வருகை தந்து தெளிவு பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுப்பதாக ஹிண்ட்ராப் ஊடக தொடர்பாளர் க.சந்திரமோகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்யுள்ளார். தொடர்புக்கு 016 354 5869 / 017 623 0052 .

 

TAGS: