“இதற்கு எல்லாம் அம்னோ/பிஎன் -னே காரணம். பல ஆண்டுகளாக அவர்கள் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை அவை அனுமதித்தன. அடையாளக் கார்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கின”
சபா பூசல் நஜிப்புக்கு சிக்கலை அதிகரித்துள்ளது
ஸ்டார்ர்: லஹாட் டத்து ஆயுதமேந்திய ஊடுருவலும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மலேசிய ஆயுதப் படைகள் நடவடிக்கை எடுத்துள்ளதும் நஜிப்பின் செல்வாக்கு குறைவதற்கு வழி வகுத்துள்ளது. அந்த நிலைக்கு அம்னோ/பிஎன் -னே காரணம்.
பல ஆண்டுகளாக அவர்கள் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை அவை அனுமதித்தன. அடையாளக் கார்டு திட்டத்தின் கீழ் பிலிப்பினோ குடியேற்றக்காரர்களுக்கு அவை குடியுரிமையும் வழங்கின.
சபாவில் பெரும் எண்ணிக்கையில் அந்நியர்கள் இருப்பதால் ஏற்படக் கூடிய பாதுகாப்பு மருட்டல் பற்றி சபா மக்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளனர். ஆனால் அதனை புத்ராஜெயா பொருட்படுத்தவே இல்லை.
சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிவதற்கு முக்கியக் காரணமாக இருந்த மகாதீர், லஹாட் டத்து நிகழ்வுகள் தொடங்கிய பின்னர் அந்த விஷயத்தில் மிகவும் மௌனமாக இருக்கிறார். அந்த மக்களுக்கு ‘தகுதி இருந்தாலும்’ குடியுரிமை வழங்கியதை அவர் இன்னும் நியாயப்படுத்தப் போகிறாரா ?
சபாவில் வசித்து வரும் அஸ்ஸிமுடி கிராமின் சகோதரர் போலீஸ் வெளியிட்டுள்ள தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது நிலைமை மேலும் சிக்கலாக இருப்பதை காட்டுகின்றது.
சபாவில் வசிக்கும் சுலுக்-களும் மொரோ-க்களும் சுலு சுல்தானுடைய தீவிர ஆதரவாளர்கள். அவர்கள் இனிமேல் பிஎன் -னை ஆதரிப்பார்களா ?
அடையாளம் இல்லாதவன்_40f4: நஜிப் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு மணி நேரமும் பிஎன் பிரச்சார ஊடகங்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றன. எதிர்த்தரப்பைக் கண்டிக்கின்றன. அம்னோ ஊடகங்கள் அவரை தவறு ஏதும் செய்ய முடியாத கடவுளைப் போன்று சித்தரிக்கின்றன.
டாக்: பிரதமருடைய செல்வாக்கும் அவருடைய ஆளும் கட்சியின் செல்வாக்கும் குறைவதை Bank of America Merrill Lynch கருத்தில் கொள்ளவே இல்லை. அம்னோ ஆதரவு தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்ய குறும்புத்தனங்களில் நிச்சயம் ஈடுபடும்.
எஸ்எம்சி77: மலாய்க்காரர்களுடைய ஆதரவை பெறுவதற்கான கடைசி வாய்ப்பையும் நஜிப் இழந்து விட்டார் என்பது தெளிவாகும். சபாவில் படையெடுப்பாளர்கள் கொன்ற எட்டு போலீஸ் அதிகாரிகளில் எழுவர் மலாய்க்காரர்கள்.
என்றாலும் நஜிப் ஹாங் துவாவைப் போன்று நடந்து கொண்டு அம்னோவிலும் மலாய்க்காரர்களிடமும் ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முயலக் கூடும்.
அந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பிஎன் அரசாங்கம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டால் மலேசியாவிலும் சபாவிலும் கிராமப்புறங்களிலும் அதிகமான வாக்குகளை இழக்க வேண்டி வரலாம்.
எதுவும் நடக்கும்: பிஎன் எவ்வளவு சிறிய பெரும்பான்மையில் வெற்றி பெறும் என்பது முக்கியமல்ல. பிஎன் தோல்வி காணாமல் இருக்க தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு தீய நடவடிக்கைகளில் இறங்கும் என்பதே கேள்வியாகும்.