“ஊடுருவல்காரர்களை ‘பயங்கரவாதிகள்’ எனச் சொல்வதற்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்காது. நமது வீரமிக்க போலீஸ் அதிகாரிகள் கொல்லப்படும் வரையில் அவர்கள் ‘சகோதரர்கள்’ என அவர்கள் அழைத்தார்கள்.
பிஎன் ஆதரவுக் கும்பல்கள் பிகேஆர் ஆதரவாளர்கள் மீது முட்டைகளையும் கம்புகளையும் வீசினர்
பங்குன்லா மலேசியா: எதிர்ப்பைக் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மக்கள் மீது பொருட்களை வீசுவதும் அவர்களைத் தாக்குவதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விஷயமாகும். அம்னோ கருத்துக்கள் அந்த ‘சம்சிங்’ கும்பல்களுக்கு பல ஆண்டுகளாக ஊட்டப்பட்டிருக்க வேண்டும்.
போலீஸ் நிலையம் ஒன்று அருகில் செயல்படுகிறது. ஆனால் அந்தக் கும்பல் சாலைகளில் ஆதிக்கம் செலுத்தியது. அரச மலேசியப் போலீஸ் படை, அம்னோ போலீஸ் படையா என நாம் எண்ணத் தோன்றுகிறது.
சிறந்த மலேசியாவுக்காக நாம் மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.
மொஹிகான்: இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் தங்கள் உரிமைகளுக்குப் போராடும் ஆயுதமில்லாத ஏதுமறியாத மக்கள் மீது தான் அவர்கள் அதனைச் செய்வார்கள்.
நிறைய ஆயுதங்களை வைத்திருந்த ஊடுருவல்காரர்களை ‘பயங்கரவாதிகள்’ எனச் சொல்வதற்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்காது. நமது வீரமிக்க போலீஸ் அதிகாரிகள் கொல்லப்படும் வரையில் அவர்கள் ‘சகோதரர்கள்’ என அவர்கள் அழைத்தார்கள்.
அவர்கள் இந்த உலகமே தங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது என எண்ணும் அம்னோ முரடர்கள், குண்டர்கள் ஆவர்.
ராக்யாட் மலேசியா: அன்வார் இப்ராஹிம் பெயரை அவர்கள் தவறாக உச்சரித்தனர். Kesian, tak berpelajaran, nak buat macam banyak pandai. அது தவறான ‘அனுவார் இப்ராஹிமாக’ இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
இத்தோவி: அன்வார் இப்ராஹிம் அனுவார் இப்ராஹிம் அல்ல என்பது தெரிந்த விஷயமாகும். அந்தக் கோமாளிகள் திசை திருப்பவும் வழக்குத் தொடுக்கப்படலாம் என்ற அச்சத்தினாலும் அவ்வாறு செய்துள்ளனர்.
இது போன்ற நடவடிக்கைகள் அம்னோ/பிஎன் -னையே திருப்பித் தாக்கும்.
மஹாஷித்லா: பிலிப்பின்ஸுக்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஏற்பட தாம் மேற்கொண்ட நடுவர் பணியின் விளைவுகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு நஜிப்பும் அம்னோவும் முயன்று வருகின்றன.
அந்தச் சமரசப் பணியில் சுலு சுல்தானும் மோரோ தேசிய விடுதலை முன்னணியும் விடுபட்டுப் போனதும் பிரச்னைக்குக் காரணம்.
ஷத்ரியன்: அந்தக் குண்டர்கள் நூறாயிரக்கணக்கான பிலிப்பினோக்களுக்கு சட்டவிரோதமாக ஒரே நாளில் குடியுரிமை வழங்கி மலேசியாவின் கதவுகளைத் திறந்து விட்ட துரோகிக்கு எதிராக அந்தக் குண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.
சுலு சுல்தான் முதலில் தமது ஆட்களை அனுப்பி அடுத்து அவர்களை ஆட்சி புரிவதற்கான உரிமையைக் கோர எண்ணியிருந்ததாகத் தோன்றுகிறது.
ஆனால் அந்தத் துரோகி ஊடுருவலுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போன்று அமைதியாக இருக்கிறார். அந்த இனவாதியின் உண்மையான நிறத்தை மலேசியர்கள் உணர வேண்டும்.
அடையாளம் இல்லாதவன் #37634848: உண்மையில் வெறுப்பைத் தருகின்றது. அம்னோ போக்கிரிகள் இந்த மண்ணில் கலவரத்தை தூண்டுகின்றனர். இது தான் ஜனநாயகமா ?
சுலு பயங்கரவாதிகள் மேற்கொண்ட ஊடுருவலுக்கு அன்வார் மீதும் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள் வெளியிட்டன.
முதல் மூன்று வாரங்களுக்கு அரசாங்கம் உண்மையான செய்தியை வெளியிடவே இல்லை. அதனைத் தான் தியான் சுவா ‘சண்டிவாரா’ என்றார்.
என்ன நடக்கிறது: அம்னோவும் பிஎன் -னும் தங்கள் ஆதரவாளர்களை இப்படிக் குண்டர்களைப் போல இயங்குவதற்கு அனுமதித்தால் இறுதியில் இழப்பு அவற்றுக்குத் தான்.