-வி.சம்புலிங்கம், ஹிண்ட்ராப், துணைத் தலைவர். மார்ச் 12, 2013.
ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மலேசிய இந்தியர்களின் 56 ஆண்டு கால மனித உரிமை மீறல்களுக்கு முற்றி புள்ளி வைக்கும் நோக்கில் மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரத பிரார்த்தனையை 2 ஆம் நாளாக தொடர்கிறார். ரவாங் , ஜாலான் டெம்ப்லர் 17 1/2 மைல் கம்போங் பெங்காளியில் வீற்றிருக்கும் அருள்மிகு அகோர வீரபத்திரர்- சங்கிலி கறுப்பர் ஆலயத்தில் வேதமூர்த்தி தண்ணீரை மட்டும் அருந்தி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மலேசிய இந்தியர்கள் தொடர்ந்து சமூக பொருளாதார துறைகளில் வஞ்சிக்கப்பட்டு பெரும் பின்னடைவிற்கு தள்ளப் பட்டிருக்கும் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் ஹிண்ட்ராப் வடிவமைத்துள்ள ஐந்தாண்டு பெருந்திட்டத்தை ஏற்க பாரிசான் மற்றும் பக்கத்தான் ஆகிய இரு தரப்பு அரசியல் கூட்டணிகளும் ஒப்புதல் அளிக்க மறுக்கும் நிலையில் இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப் படுகிறது.
உண்ணா விரத பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் வேதமூர்த்தியை பொதுமக்கள் சந்தித்து அவருக்கு ஆதரவையும் , அவரின் விரதம் வெற்றியடையவும் வாழ்த்து தெரிவித்து வந்த வண்ணம் இருக்கிறார்கள். சில மருத்துவர்கள் தாமாக முன்வந்து அவரின் உடல்நிலையை பரிசோதித்து ஆலோசனை வழங்கி வருகிறார்கள். ஊடக துறையை சார்ந்த நிருபர்களும் அவ்வப்போது வருகை தந்து வேதமூர்த்தியை பேட்டி கண்டும் நிகழ்வை பதிவு செய்தும் வருகிறார்கள்.
மாலை நேரங்களில் வேலை முடிந்து அதிகமானவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து வேதமூர்த்திக்கு ஊக்கம் தெரிவிக்கின்றனர். மாலை 6.30க்கு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன. சுற்று வட்டார இளைஞர்கள் பஜனைப் பாடல்களை பாடுகின்றனர். சில ஹிண்ட்ராப் பொறுப்பாளர்களும் தன்னார்வளர்களும் ஆலய வளாகத்திலேயே கூடாரங்களில் தங்கி வேதமூர்த்தியின் விரதத்திற்கு ஆதரவாய் இருக்கிறார்கள். பொதுமக்களும் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அனைவரும் ஒருமுறையாவது இங்கு வருகை தந்து ஹிண்ட்ராப் செயல் திட்ட அறிக்கையை அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற வேண்டும் என்ற ஹிண்ட்ராப் அமைப்பின் கோரிக்கைக்கு அதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்களின் வருகையால் திரு.வேதமூர்த்தி மேற்கொண்டிருக்கும் விரதத்திற்கு மேலும் ஊக்கம் அளிக்க முடியும். தொடர்புக்கு 016 354 5869 / 017 623 0052 .