ஜிபிஎம்: சிறீலங்கா அரசுக்கு எதிராக மலேசியா ஒரு தீர்மானத்தைக் கொணர வேண்டும்

GBM Memoதற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வரும் சிறீலங்கா மீதான தீர்மானத்தின் மீது  அதிகமான அக்கறை காட்ட வேண்டும் என்று இந்நாட்டின் அரசியல் கட்சி சார்பற்ற, பல்லின, பலசமயங்களின் கூட்டமைப்பான மலேசிய செயல்நடவடிக்கை கூட்டமைப்பின் (ஜிபிஎம்) ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மலேசியாவை கேட்டுக்கொண்டுள்ளது.

ஐநா புதிதாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சிறீலங்கா மனித உரிமைகள் நிலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமைகள் மன்ற கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன்வைக்கப் போவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. மலேசியாவும் அவ்வாறு செய்வதற்கான காலக்கட்டத்தில் இருக்கிறது. மே மாதம் 2009 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப் போரின் போதும், அப்போர் முடிவுற்றப் பின்னரும் சிறீலங்காவின் செயல்பாடுகள் குறித்து ஒரு சுயேட்சையான, அனைத்துலக விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஒன்றை மலேசியா கூட்டாகக் கொணர வேண்டும் என்று ஜிபிஎம் அதன் அறிக்கையில் மலேசியாவை கேட்டுக் கொண்டுள்ளது.

சிறீலங்காவில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வர்த்தகgbm_logo நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக நடத்தப்படும்  தாக்குதல்கள் மீதான அதிகரித்து வரும் அறிக்கைகள் பற்றி ஜிபிஎம் கவலை கொண்டுள்ளதோடு மலேசியா கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஜிபிஎம் தலைவர் தான் இயு சின் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்திற்குப் பின்னர் மசூதிகள் மீது குறைந்தது 8 தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், தீவிரவாத புத்த அமைப்புகள் எண்ணற்ற ஆர்ப்பாட்டங்களை முன்நின்று நடத்தின.

மே மாதம் முடிவுற்ற போருக்குப் பின்னர், சட்டத்திற்குப்புறம்பான கொலைகள், மக்கள் கடத்தப்படுவது மற்றும் சித்ரவதை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக சிறீலங்கா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

unhrcஊடகம் மற்றும் நீதித்துறை சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான செய்தியாளர்கள் கொல்லப்பட்டதோடு மருட்டலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, சிறீலங்கா தலைமை நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டு மீதான விசாரணை நடைமுறை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பையும் புறந்தள்ளி விட்டு நாடாளுமன்றம் அவரை தண்டித்தது.

சிறீலங்காவில் முதலில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். தற்போது இஸ்லாமியர்கள்  தாக்குதல்களின் இலக்காக இருக்கின்றனர் என்பதை ஜிபிஎம் காண்கிறது. இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் இவ்வாறான சூழ்நிலைக்கு உட்படுத்திய ஒரு நாட்டை மலேசியா ஆதரிக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று ஜிபிஎம் தலைவர் தான் இயு சின் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை மலேசியா ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் கொணர வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு மகஜரை மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பின் (ஜிபிஎம்) உறுப்பினர்களான 22 அரசு சார்பற்ற அமைப்புகள் நேற்று மலேசிய வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைத்தன.

மகஜருக்கு ஆதரவு வழங்கிய ஜிபிஎம் உறுப்பினர்கள்:

1.     Kuala Lumpur & Selangor Chinese Assembly Hall (KLSCAH)

2.     Aliran

3.     Tamil Foundation

4.     Pertubuhan IKRAM Malaysia (IKRAM)

5.     Majlis Perundingan Malaysia Agama Buddha; Krisitian; Hindu; Sikh dan Tao (MPMA-BKHST)

6.     Negeri Sembilan Chinese Assembly Hall (NSCAH)

7.     Lim Lian Geok Cultural Development Centre (LLG)

8.     Muslim Professionals Forum (MPF)

9.     Suara Rakyat Malaysia (SUARAM)

10.  Pusat Komunikasi Masyarakat (KOMAS)

11.  Saya Anak Bangsa Malaysia (SABM)

12.  Persatuan Masyarakat Selangor dan Wilayah Persekutuan (Permas)

13.  National Indian Rights Action Team (NIAT)

14.  Japan Graduates Association, Malayia (JAGAM)

15.  Islamic Renaissance Front  (IRF)

16.  Persatuan Masyarakat Selangor dan Wilayah Persekutuan ( PERMAS )

17.  Community Action Network ( CAN )

18.   Malaysia Youth & Students Democratic Movement (DEMA) endorses.

19.   Association of Women Lawyers

20.   Tenaganita

21.   Persatuan Sahabat Wanita Selangor

22.  Writer Alliance for Media Independence (WAMI)