சொத்துச் சந்தையின் போக்கைப் பார்க்கையில் சொத்து வைத்திருப்பவர்களுக்குக் கொண்டாட்டம். ஆனால், வீடு வாங்க நினைப்போரின் நிலைதான் திண்டாட்டம்.
பேங்க் நெகாரா மலேசியா (பிஎன்எம்) அறிக்கையின்படி, 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் வீட்டு விலை 11.2 விழுக்காடு எகிறியது. பத்தாண்டுக் கால சராசரி விலையேற்றத்தைவிட அது இரு மடங்கு அதிகமாகும். அடுத்த சில ஆண்டுகளுக்கு வீட்டு விலை அதிகரிப்பு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2009 மூன்றாம் காலாண்டிலிருந்து வீட்டு விலை வேகமாக உயரத் தொடங்கியது.
அடுத்த சில ஆண்டுகளுக்கு புதிதாக வீடு வாங்க நினைப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே வரும். புதிதாகக் கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை அவர்களின் தேவையை ஈடு செய்யப் போதுமானவையாக இருக்க மாட்டா என்று மத்திய பொருளகத்தின் ஆண்டறிக்கை கூறியது.
கோலாலும்பூர், சிலாங்கூர், பினாங்கு ஆகியவற்றில் கட்டுப்படியான விலையில் போதுமான வீடுகள் கட்டப்படாதது இரண்டாம் நிலை சொத்துச் சந்தையில் விலைகள் உயரக் காரணமாகும் என பிஎன்எம் கூறிற்று.
புதிதாகக் கட்டப்படும் வீடுகளின் விலை பெரும்பாலும் ஒரு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டிச் செல்வதால் சொத்துப் பரிவர்த்தனையில் 80 விழுக்காடு இரண்டாம் நிலை சந்தையில்தான் நடைபெறுகிறது.
சொத்து விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
இதன் தொடர்பில் மேலதிக விவரங்களுக்கு KiniBiz-க்குச் செல்லவும்.