தனி நபர் வருமான உயர்வு சாதாரண மலேசியர்களைப் பிரதிநிதிக்கவில்லை

najibதனி நபர் வருமானம் 2009ம் ஆண்டுக்கும் 2012ம் ஆண்டுக்கும் இடையில் 49 விழுக்காடு உயர்வு  கண்டுள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொள்வது சாதாரண மலேசியர்கள் எதிர்நோக்கும் நிலையைப் பிரதிபலிக்கவில்லை என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்

உலக வங்கி வழங்கியுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் அந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர் வருமானம்
6,670 அமெரிக்க டாலரிலிருந்து 9,970 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என பொருளாதார உருமாற்றத்
திட்டத்தின் விளைவுகள் பற்றி உரை நிகழ்த்திய போது நஜிப் சொன்னார்.

ஆனால் தனிநபர் வருமானத்தைக் கணக்கிட்ட போது பண வீக்கம், அடிப்படைப் பொருட்கள், போக்குவரத்து,
குடியிருப்பு வசதிகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதை
ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினர்.

மொத்த தேசிய வருமானத்தை மலேசியாவில் வேலை செய்யும் மக்களுடன் கணக்கிடும் போது கிடைக்கும்
சராசரி வருமானம் தனி நபர் வருமானமாக மதிப்பிடப்படுகின்றது என ஜனநாயகம், பொருளாதார
விவகாரங்கள் ஆய்வுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல் வான் ஜேன் கூறினார்.najib1

“ஒரு வேளை அதன் நன்மைகள் பணக்காரர்களுக்கு மட்டும் கிடைத்திருக்கலாம். ஆனால் சாதாரண
மலேசியர்களுக்கு பலன் கிடைக்கவில்லை,” என வான் சைபுல் சொன்னார்.

“மக்கள் நன்மைகளை அடைந்துள்ளனரா இல்லையா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. என்னுடைய
நண்பர்கள் வட்டத்தில் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்கின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்குப்  பெரிய சம்பள உயர்வுகள் கிடையாது.”

2009 பொருளாதார மந்த ஆண்டாகும்

அத்துடன் 2009 பொருளாதார மந்தம் நிலவிய ஆண்டாகும். ஆகவே அந்த ஆண்டின் தனி நபர்
வருமானத்தை ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்காது என்றும் வான் சைபுல் சொன்னார்.

“அந்த அதிகரிப்பு 2009ஐ அளவு கோலாகப் பயன்படுத்துகின்றது. ஆனால் 2009 பொருளாதார மந்தம் நிலவிய
ஆண்டு. ஆகவே 2009ம் ஆண்டுடன் ஒப்பு நோக்கினால் எதுவும் நன்றாகத் தோன்றும்.”

najib2வான் சைபுல் தெரிவித்த கருத்தை வியூக ஆலோசகரும் அரசியல் ஆய்வாளருமான கூ கே பெங்-கும் ஒப்புக்  கொண்டார். குறைந்த வருமானம் பெறும் பிரிவில் உள்ள 40 விழுக்காட்டினர் கடந்த நான்கு ஆண்டுகளில்  சராசரி ஐந்து விழுக்காடு சம்பள உயர்வை மட்டுமே அனுபவித்துள்ளதாக அவர் சொன்னார்.

“தனி நபர் வருமானம் பண வீக்கத்தைக் கருத்தில் கொள்வதில்லை. பொருட்கள், போக்குவரத்து, குடியிருப்பு  ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றம் தனிநபர் வருமானத்தைக் கணக்கிடும் போது  பரிசீலிக்கப்படுவதில்லை,” என்றும் கூ தெரிவித்தார்.