பெமாண்டு தனி நபர் வருமான அதிகரிப்பை 41 விழுக்காடாக குறைத்துள்ளது

pemandu2009க்கும் 2012க்கும் இடையில் தனி நபர் வருமானம் 49 விழுக்காடாக அதிகரித்துள்ளது என முன்பு  கூறப்பட்டதை 41 விழுக்காடாக பெமாண்டு என்ற நிர்வாக அடைவு நிலை பட்டுவாடாப் பிரிவு குறைத்துள்ளது.

புதிய கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டதால் 49 விழுக்காடு பெறப்பட்டது என்றும் எண்களைப் பெருக்கிக்
காட்டும் நோக்கம் இல்லை என்றும் அது தெரிவித்தது.

என்றாலும் அந்த மாற்றம் 2018ம் ஆண்டு வாக்கில் உயர்ந்த வருமான தகுதியைத் தரும் 15,000 டாலர் தனி
நபர் வருமானத்தை அடைய முடியும் என்ற பெமாண்டு ஆரூடத்தில் எந்த மாற்றமும் இல்லை என அது
கூறியது.

“மூன்று ஆண்டுகளில் 41 விழுக்காடு வளர்ச்சி மகத்தானதாகும்,” என பிரதமர் துறை அமைச்சரும் பெமாண்டு
தலைமை நிர்வாக அதிகாரியுமான இட்ரிஸ் ஜாலா KiniBiz-டம் சொன்னார்.

“நடப்புப் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரியான பாதையாகும். நாம் 2020ல் அல்லது அதற்கு முன்னதாகவே
வளர்ச்சி அடைந்த நாடாக மாற முடியும்.”

2009ம் ஆண்டை வேண்டுமென்றே பயன்படுத்தி நல்ல புள்ளிவிவரங்களைக் காட்டும் எண்ணம் பெமாண்டுக்கு
இல்லை என்றும் இட்ரிஸ் குறிப்பிட்டார்.

“நாங்கள் 2009, 2010க்கான தனி நபர் வருமானத்தைப் பயன்படுத்திய போது அது தான் சரியான புள்ளி
விவரமாகும். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த புள்ளி விவரம் மாறும் என்பது எங்களுக்கு நிச்சயமாகத்
தெரியாது.”

2020ல் நாம் உயர்ந்த வருமானத்தை பெறுவது தான் இறுதி இலட்சியம். நடப்பு ஆரூடங்கள் நாம் அதனை
அடைய முடியும் எனக் கூறுகின்றன. எந்த புள்ளி விவரத்தைப் பயன்படுத்தினாலும் நடப்பு விகிதங்கள் வளர்ச்சி  ஏற்படுவதை உணர்த்துகின்றன.”

“ஆனால் உலகம் நலிவடைந்தால் சூழ்நிலைகள் மாறினால் எங்களை நீங்கள் குறை சொல்லக் கூடாது.”