பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் விவாதம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை தெரிவிக்கும் பொருட்டு ஆர்டிஎம் எனப்படும் மலேசிய வானொலி தொலைக்காட்சி நிர்வாகத்தைச் சந்திக்க அங்காசாபுரி வளாகத்துக்குள் நுழைய முயன்ற மூன்று மாணவர் போராளிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த மூவரில் SMM என்ற Solidariti Mahasiswa Malaysia அமைப்பின் தலைவர் முகமட் சாப்வான் அனாங்கும்
ஒருவர் ஆவார். ஆர்டிஎம் இயக்குநர் அலுவலகமும் அமைந்துள்ள தகவல் அமைச்சு அலுவலக
நுழைவாயிலில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சு அதிகாரிகளுடனும் போலீசாருடனும் தங்கள் கோரிக்கைகளை அந்த அரசு சாரா அமைப்பு
விவாதித்துக் கொண்டிருந்த வேளையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக SMM செயலாளர் அகமட் சுகிரி
கமாருதின் கூறினார்.
அந்த விவாதத்தின் போது ஆர்டிஎம் இயக்குநரை திங்கட்கிழமை சந்திக்க குழு ஒப்புக் கொண்டதாக அகமட்
சுக்ரி சொன்னார். அடுத்து அங்கிருந்து வெளியேறுமாறு குழுவிடம் கூறப்பட்டது.
“ஆனால் ஆர்டிஎம் இயக்குநர் உள்ளே இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் சாப்வான் திரும்பச் சென்றார். அவர் இருவருடன் நுழைந்தார். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது அகமட் சுக்ரி தெரிவித்தார்.