வேதா அவர்களே வாக்குறுதிகள், வாக்குறுதிகள் – அவை தான் உங்களுக்குக் கிடைக்கப் போகின்றன

waytha“பிஎன் எதுவும் செய்வதற்கு இப்போது நேரமில்லை. பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே   உங்களுக்குப் பெரும்பாலும் வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கும்.”

பிரதமர் இறுதியில் ஹிண்ட்ராப் தலைவர்களைச் சந்திக்கிறார்

ஜிஎச்கோக்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் ஹிண்ட்ராப் தலைவர்களும் இன்று சந்திக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இப்போது நிகழும் இந்தச் சந்திப்பில் ‘வாக்குறுதி’ வழங்கப்படுமே தவிர பெரிய விளைவு
ஏதும் ஏற்படப் போவதில்லை.

பிஎன் எதுவும் செய்வதற்கு இப்போது நேரமில்லை. பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே
உங்களுக்குப் பெரும்பாலும் வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கும். அதில் ஏதாவது நன்மை இருக்கிறதா ?

வரலாற்று ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி சில மில்லியன் இந்தியர் வாக்குகள் பிஎன் -னுக்கு விழுவதற்கு
அந்தச் சந்திப்பு வகை செய்யுமா ? அது நிகழ்ந்தால் மலேசியாவுக்கு என் அனுதாபங்கள்.

அடையாளம் இல்லாதவன்#37078596: ஹிண்ட்ராப் திறந்த மனதுடன் செல்ல வேண்டும். அரசியலில் நிரந்தர  எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை. பக்காத்தான் ராக்யாட் ஹிண்ட்ராப்பை ஒதுக்கிய போது அது மற்ற  வாய்ப்புக்களை தேடுவது நியாயமே. ஆனால் அது தனது இலட்சியங்களில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஏரிஸ்46: வேதா, உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.ஹிண்ட்ராப் பக்காத்தானிலிருந்து வந்தாலும் சரி  பிஎன் -னிடமிருந்து வந்தாலும் சரி ஆதரவைப் பெற வேண்டும்.

ஆனால் நஜிப் உங்கள் பெருந்திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். தற்போது
மஇகா-வுக்கு ஒதுக்கப்பட்ட எல்லாத் தொகுதிகளையும் மாற்றி விட வேண்டும். ஏனெனில் மஇகா முன்மொழியும்  எல்லா வேட்பாளர்களுடன் மோதுவதற்கு தானே ஹிண்ட்ராப் பக்காத்தானிடம் கோரிக்கை விடுத்தது.

அத்துடன் கடந்த 55 ஆண்டுகளாக இந்தியர்கள் ஒதுக்கப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும் திட்டமிட்டு
அமலாக்கிய அதே நபர்களுடன் நீங்கள் பேரம் பேசப் போகின்றீர்கள்.

பொதுத் தேர்தலில் நஜிப் அடைவு நிலை எப்படி இருந்தாலும் அம்னோ ஜமீன்கள் வாக்குறுதிகளை
நிறைவேற்றுவார்களா ?

அப்பும்: இது எல்லாம் அரசியல் சூதாட்டம். தலைவர்கள் அதனைப் புரிந்து கொண்டு விலகி விட வேண்டும்.
ஆனால் ஹிண்ட்ராப் தலைவர்களுக்கு அந்த ஆற்றல் இருப்பதாகத் தெரியவில்லை.

ஹிண்ட்ராப் தன்னை சட்ட விரோதமாக்கி எல்லா வகையான பெயர்களையும் சூட்டிய ‘எஜமானரிடம்’ மீண்டும்
செல்கிறது. அதன் தலைவர்களுடைய கௌரவம் எங்கே போனது ?

பிச்சைக்காரர்கள் தேர்வு செய்யக் கூடாது எனச் சொல்ல வருகின்றீர்களா ? ஆமாம் பக்காத்தான் அல்லது
அம்னோவிடமிருந்து அவர்கள் பிச்சைக்காசுக்காக ஏங்குவதாகத் தெரிகிறது.

“நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என் பாத்திரத்தை நீங்கள் நிரப்புவது தான், அடுத்து நான் நன்றாக நடந்து
கொள்வேன்.”

கறுப்பு மம்பா: ஹிண்ட்ராப் அனுபவிக்கும் பிரச்னைகளையும் துயரங்களையும் உருவாக்கியது பிஎன்.
ஹிண்ட்ராப் இப்போது அதனை கட்டித் தழுவப் போகிறது. என்ன வேடிக்கை என்ன வினோதம்.

நியாயம்: இது ஜனநாயக நடைமுறையாகும். உருமாற்றத்துக்கு உதவும் என தான் கருதும் எந்தக் கட்சியுடனும்  பேச்சு நடத்த ஹிண்ட்ராப்புக்கு உரிமை உண்டு.

அரசியல் என்பதே கேக்கைப் பகிர்ந்து கொள்வதாகும். முழுக் கேக்கையும் நீங்களே எடுத்துக் கொள்ளக்
கூடாது. நீங்கள் எதிர்பார்க்காத மாற்றங்கள் அரசியல் வரைபடத்தில் ஏற்படுவது வேடிக்கையாகவும் உள்ளது.

ஜேம்ஸ்_3392: மஇகா கடந்த 55 ஆண்டுகளாக அம்னோவுக்கு தோழமைக் கட்சியாக இருந்து வருகின்றது.
என்றாலும் மலேசிய இந்தியர்களுடைய நல்வாழ்வுக்கு தான் விடுக்கும் வேண்டுகோளுக்கு பிஎன் -னை
இணங்கச் செய்வதில் அது வெற்றி பெறவில்லை. அப்படி இருக்கும் போது ஹிண்ட்ராப் கோரிக்கைகளை நஜிப்
எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப் போகிறார்.

வருத்தமடைந்தவன்: நஜிப் ஹிண்ட்ராப்புடன் பேச்சு நடத்துவது மஇகா-வுக்கு அவமானம். கூட்டணியில்
தோழமைக் கட்சியாக மஇகா கடந்த 55 ஆண்டுகளாக பிஎன் -னை ஆதரித்து வந்துள்ளது. மஇகா-வை பிஎன்
கைவிடுகிறது என்பதற்கு இது அறிகுறியா ?

எல்லா மலேசியர்கள்: நஜிப்பின் வெற்று வாக்குறுதிகள் வேலை செய்யாது ? அன்வார் வாக்குறுதிகள் வேலை   செய்யுமா ?

பக்கத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்தியர்களுக்கு ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. இருந்தும்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனச் சிலர்
சொல்கின்றனர். வேடிக்கை மனிதர்கள்.

நியாயமானவன்: எல்லா இந்தியர்களும் ஹிண்ட்ராப்பை ஆதரிப்பதாக ஹிண்டராப்  இணைய எழுத்தர்கள்
எண்ணிக் கொண்டிருப்பது எனக்கு வியப்பைத் தருகிறது.

 

TAGS: