தேர்தல் கொள்கை அறிக்கைக்கு 10 நிமிட ஒலிபரப்பு நேரத்தை டிஏபி நிராகரிக்கிறது

rtmநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் ஆர்டிஎம் என்ற மலேசிய வானொலி தொலைக்காட்சியில் எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையை வழங்குவதற்கு அரசாங்கம் கொடுக்க முன் வந்துள்ள 10 நிமிட  ஒலிபரப்பு நேரத்தை டிஏபி ஏற்றுக் கொள்ளாது.

தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் வழங்க முன் வந்துள்ள அந்த நேரம் கட்சிக்கு ‘ஒர்
அவமானம்’ என்று தாம் கருதுவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

rtm1“நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. ஜனநாயகம் என்பது தர்மமும் அல்ல, பிச்சை போடுவதும் அல்ல. எங்கள்
10 நிமிடம் ஒலிபரப்பு நேரம் கொடுப்பதால் எங்களுக்கு பேச்சுச் சுதந்திரம் இருப்பதாக அர்த்தமாகாது,” என
அவர் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

“நாங்கள் விரும்புவது பதில் சொல்வதற்கான உரிமை ஆகும். தொலைக்காட்சியில் ஒரு நிமிடம் அல்லது ஒரு
மணி நேரம் அல்ல. இது உண்மையில் வேடிக்கையாக இருக்கிறது.”

“நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒலிபரப்பு நேரத்தைக் கொடுக்க முன் வந்ததின் மூலம் பத்திரிக்கை  சுதந்திரத்தை அல்லது பேச்சு சுதந்திரத்தை தாங்கள் பின்பற்றி விட்டோம் என்ற மன நிறைவை அவர்களுக்குத்  தர நாங்கள் விரும்பவில்லை.”

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாகவும் லிம் குறிப்பிட்டார். தாம்
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் தொடர்பு கொள்ளப் போவதாகவும் அவர் சொன்னார்.

rtm2ஒலிபரப்பு நேரம் பிஎன் -னுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும் அவற்றின் உரைகள் முன் கூட்டியே  பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கடந்த வெள்ளிக் கிழமை ராயிஸ் அறிவித்தது பற்றி லிம் கருத்துரைத்தார்.

அதனை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் கட்சிகளைப் பொறுத்தது என்றும் ராயிஸ் குறிப்பிட்டிருந்தார்.

“அவர்கள் பிரச்சாரத்தின் போது எங்களை அன்றாடாம் தாக்குகின்றனர். அடுத்து எங்கள் தேர்தல் கொள்கை
அறிக்கைக்கு 10 நிமிடங்கள் மட்டுமே கொடுக்கின்றனர்,” என லிம் சொன்னார்.

“அது எங்கள் ஜனநாயக உரிமை. நாங்கள் அதற்காக பிச்சை கேட்கக் கூடாது, வெறும் 10 நிமிடத்தில் எங்களை
நீங்கள் வாங்கி விடலாம் என நீங்கள் எண்ண வேண்டாம்.”

“பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் பதில் கொடுப்பதற்கான உரிமை
எங்களுக்கு வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.”

 

TAGS: