பிரதமர் வாக்களிப்பு வழிகாட்டியான ‘Jom Bertindak’ கையேட்டை அறிமுகம் செய்துள்ளார்

najibமலேசியர்கள் 13வது பொதுத் தேர்தலில் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு உதவியாக நஜிப் அப்துல் ரசாக் ‘Kit Jom Bertindak’ (நாம் செயல்படுவோம் கையேடு) என்னும் கையேட்டை அறிமுகம் செய்துள்ளார்.

மார்ச் 18ம் தேதி பிரதமரது முகநூல் பக்கம் வழியாக அறிமுகம் செய்யப்பட்ட அந்தக் கையேட்டில்
வாக்களிப்புக்கு வழிகாட்டியாக எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய தகவல்கள் அடங்கியுள்ளன.

வாக்காளர்கள் எப்படித் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் தகுதி, தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் வாக்காளர் தகுதியை சோதிப்பது எப்படி, வாக்களிப்பு
தினத்தன்று செய்ய வேண்டியவை போன்ற 10 தலைப்புக்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள புதிய நடைமுறைகள் குறித்த கேள்விகளுக்கும் அதில் பதில்கள்
காணப்படுகின்றன. அழியா மையைப் பயன்படுத்துவது, அஞ்சல் வாக்களிப்புக்கான தகுதி, வாக்காளருடைய
அடையாளக் கார்டு தேர்தலுக்கு முன்பு காணாமல் போனால் என்ன செய்வது போன்றவை அவற்றுள்
அடங்கும்.

வாக்குகள் செல்லாமல் போவதைத் தடுக்க வாக்குச் சீட்டுக்களில் சரியான முறையில் குறியிடுவது குறித்தும்
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வழிகாட்டி கையேட்டில் கார் வில்லையும் பேனாவும் கொடுக்கப்பட்டுள்ளன

அந்த கையேடு இலவசமானதாகும். அதனை www.1Malaysia.com.my. இணையத் தளத்தில் கோர முடியும்.

 

TAGS: