‘தவணைக் காலம் முடிந்த பிரதமர்’ கையெழுத்திடும் ஆயுத ஒப்பந்தங்கள் செல்லாதவையாக இருக்கலாம்

limபுத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்ளுமானால் மார்ச் 8-க்கு பின்னர் கூட்டரசு அரசாங்கம்  கையெழுத்திட்ட எல்லா ஒப்பந்தங்களையும் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி மறு ஆய்வு செய்யும்.

அவை நியாயமற்றவை என்றும் அல்லது அதிகார அத்துமீறல் எனக் கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றை
பக்காத்தான் ரத்துச் செய்யவும் கூடும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் சொல்கிறார்.

கடந்த பொதுத் தேர்தல்கள் முடிந்து ஐந்து ஆண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் அரசாங்கம் அந்த
ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது என அவர் நேற்று செபுத்தேயில் உரையாற்றிய போது கூறினார்.

அடுத்த அரசாங்கம் உறுதி செய்ய வேண்டிய இடைக்கால ஒப்பந்தங்களாகவே அவை கருதப்பட வேண்டும்
என்றார் அவர்.

லங்காவியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கையெழுத்தான 4.2 பில்லியன் ரிங்கிட் பெறும் ஆயுத ஒப்பந்தங்கள்   பற்றிக் குறிப்பிட்ட லிம்,” அந்த ஒப்பந்தங்கள் எங்களைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவை மார்ச் 8-க்குப்  பின்னர் செய்யப்பட்டுள்ளன. அப்போது பிரதமர் நம்பகத்தன்மையையும் சட்டப்பூர்வத் தன்மையையும் இழந்து  விட்டார். அவர் ‘தவணைக் காலம் முடிந்த பிரதமர்’ ஆவார்,” என்றார்.

 

TAGS: