“பெர்சே அந்த “உள்நாட்டில் உருவான அந்த பயங்கரவாதிகளுக்கு” எதிராக போராடி வருகின்றது. விரைவில் சுங்கை பூலோ சிறைச்சாலை மலேசியாவின் குவாண்டனாமோ ஆகும்.”
‘வாக்காளர் பதிவு மோசடியில் அம்னோ ஆள் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார்’
பெர்ட் தான்: வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள்- ஒப்புதல் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது
தொடர்பில் கிள்ளான் எம்பி சார்லஸ் சண்டியாகோ இவ்வாறு சொல்கிறார்: “ஒர் அரசாங்க அமைப்பே அதனைச் செய்திருக்க வேண்டும். சாதாரண மனிதர் அந்தத் தகவலை வழங்கியிருக்க முடியாது”
நான் அவர் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். சிங்கப்பூரில் வேலை செய்யும் என் உறவினருக்கு அது
நிகழ்ந்தது. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை வாக்களித்தார். 2008 தேர்தலில் தமக்குத் தெரியாமல்
தாம் இன்னொரு மாநிலத்தில் உள்ள பெல்டா குடியேற்றப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதை அவர் கண்டு
பிடித்தார்.
இந்த முறை அவர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துக் கொண்டார். அதனால் பதிவுகள் சரி
செய்யப்பட்டுள்ளன. அவர் இந்த முறை வாக்களிக்க தாயகம் திரும்புவார்.
திரு: என் புதல்வியின் நிலையும் அது தான். அதனை எப்படி செயல்படுத்துகின்றனர் என்பதையும் அதற்குப்
பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிய விரும்புகிறேன். ஒரு மனிதர் மட்டும் அதற்குப்
பொறுப்பாக இருக்க முடியாது.
“மோசடியான வாக்காளர் பதிவுக்காக உதவிப் பதிவதிகாரி என்ற அவரது பணி ரத்துச் செய்யப்பட்டுள்ளது,”
என மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
இசி அதனை ஏன் ஏற்கனவே அறிவிக்கவில்லை. கண்டு பிடிக்கப்பட்டால் பலி ஆடுகள் நீக்கப்படுகின்றன. அதனால் தான் நான் இசி-யை நம்பவில்லை. அது தவறைச் சரி செய்வதற்கு எந்தத் தகவலையும் நான் அதற்கு கொடுக்க மாட்டேன்.
கென்னி வி: அமெரிக்காவிலிருந்து இப்போது தான் திரும்பிய நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும். அவர்
வாக்காளராகப் பதிவு செய்யவே இல்லை. ஆனால் தம்மை யாரோ ஒருவர் பதிந்துள்ளதை அவர் இப்போது
கண்டு பிடித்துள்ளார்.
மற்ற நாடுகளில் நிரந்தர வசிப்பிடத் தகுதியைப் பெற்றவர்கள் அல்லது நீண்ட காலமாக கல்வி கற்கின்றவர்கள்/ வேலை செய்கின்றவர்கள் வாக்காளர்களாக தங்களை ஒரு போதும் பதிந்து கொண்டதில்லை என்றால் இசி இணையத் தளத்தில் தங்கள் தகுதியை சோதித்துக் கொள்வது நல்லது. அவர்கள் ஒரு வேளை ‘மாயாஜாலமாக’ பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.
Homesick: வாக்களிப்பு தொடர்பில் என் நிலையை எப்படி சோதிப்பது என்பதை யாராவது எனக்கு
விளக்குங்கள். நான் நீண்ட காலமாக வெளிநாட்டில் வசிக்கிறேன்.
என்றாலும் நான் அடிக்கடி தாயகம் திரும்புவேன். நான் வாக்களித்ததே இல்லை. வரும் தேர்தலில் வாக்களிக்க
நான் பதியவும் இல்லை. ஊழல் மலிந்த பிஎன் ஆட்சிக்கு நான் ஆவி வாக்காளராக இருக்க விரும்பவில்லை.
ஏதுமறியாதவனாக இருப்பதற்காக நான் வருந்துகிறேன்.
திமோத்தி: அன்புள்ள Homesick, நான் இப்போது தான் வெளிநாட்டிலிருந்து என்னுடைய நிலையைச்
சோதனை செய்தேன். நீங்கள் இசி இணையத் தளத்தில் அதனைச் சோதனை செய்யலாம்.
‘Semakan Daftar Pemilih’ என்னும் பகுதிக்கு செல்லுங்கள். அங்கு உங்கள் மை கார்டு எண்ணை குறிப்பிடவும்.
நீங்கள் பதிவு செய்யா விட்டாலும் சோதனை செய்வது நல்லது. ஏனெனில் உங்களை ‘யாரோ ஒருவர்’ பதிவு
செய்திருக்கக் கூடும்.
மாட் சாலே: எனவே ‘இந்தியர்கள் பிஎன் -னுக்கு வாக்களிப்பர்’ என பிஎன் கோமாளிகள் கூத்தாடுவதில்
வியப்பில்லை.
தாய்கோதாய்: இசி தனது எஜமானர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்ய இந்த ‘ஜிஹாட்டை’ பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது.
“உள்நாட்டில் உருவான அந்த பயங்கரவாதிகளுக்கு” எதிராக போர் தொடுத்துள்ள பெர்சே அமைப்புக்கு நன்றி
சொல்ல வேண்டும். பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் சுங்கை பூலோ சிறைச்சாலை மலேசியாவின் குவாண்டனாமோ ஆகும்.