அரசியல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிஷாமுக்கு எதிராகக் கண்டனம்

1nurulலெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா,  கடந்த ஓராண்டுக் காலமாக அரசியல் வன்செயல்கள் குறித்து புகார்கள் செய்துள்ள போதிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம் தெரிவித்தார்.

மார்ச் மாதம் மட்டும் லெம்பா பந்தாயில் தம் தேர்தல் பணியாளர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்செயல்கள் குறித்து நான்கு போலீஸ் புகார்களைச் செய்ததாக அவர் தெரிவித்தார்.

1nurul1உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், “அபத்தமான அறிக்கைகள்” விடுவதை நிறுத்திக்கொண்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

“அறிக்கை விடுவதை நிறுத்துங்கள். ஹிஷாமுடின் அவரது கடமையைச் சரிவரச் செய்யவில்லை. இப்படிப்பட்ட சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடப்பதைத் தடுக்க முறையான நடவடிக்கைகள் தேவை”, என்றாரவர்.

கடந்த மாதம் நிகழ்ந்த நான்கு சம்பவங்களில் ஒன்று பங்சாரில் ஜாலான் கூராவில் நடந்தது. மார்ச் 28-இல், அங்குள்ள பிகேஆர் நடவடிக்கை அறை உடைக்கப்பட்டது. அதனால் கட்சி சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் ரிம 20,000.

மார்ச் 29-இல், பிகேஆர் கட்சிப் பணியாளர் ஒருவர் எஸ்எம்கே ஸ்ரீபந்தாயில் தாக்கப்பட்டார். அவருக்குத் தலையில் ஐந்து தையல்கள் போட வேண்டியதாயிற்று.

 பிஎன் தரப்பில் மவுனம்

1nurul abகடந்த ஆண்டிலிருந்து இப்படிப்பட்ட வன்செயல்கள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஆடம் அட்லி என்னும் சமூக ஆர்வலர் லெம்பா பந்தாயில் பிகேஎன்எஸ் அடுக்குமாடி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு குடும்பத்துக்கு ஆறுதல் கூற முனைந்தபோது தாக்கப்பட்டார்.

2012-இல், பந்தாய் பெர்மாயில் பிகேஆர் செராமா ஒன்றின்மீது முட்டைகளும் கற்களும் வீசி எறியப்பட்டன.

இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு எதிராக ஆளும் கட்சி எதுவும் கூறும் என்று பார்த்தால் வாயே திறக்கவில்லை. அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா (வலம்) மட்டும் அதைக் கண்டித்தார்.

“சைபுடின் அப்துல்லா மட்டுமே அதைக் கண்டித்தார். மற்ற குரல்கள் எங்கே?”, என்று நுருல் இஸ்ஸா வினவினார்.