ஆட்சிமாற்றம் அமைதியாக நடைபெறும் என உறுதி கூறினார் நஜிப்

1 transition13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் மாற்றம் ஏற்படுமாயின் அது எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியாகவே நடைபெறும்.

இன்று காலை 12வது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதைத் தொலைகாட்சியில் அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இவ்வாறு உறுதி கூறினார்.

“நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள், அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்பவர்கள், மக்கள் குரலுக்கு மரியாதை கொடுப்பவர்கள்”, என்று நஜிப் தொலைக்காட்சியில் 15-நிமிட உரையின் முடிவில் வலியுறுத்தினார்.

சாபாவின் கிழக்குக் கரைப் பகுதி, பிப்ரவரியில் ஆயுதம் தாங்கிய சூலு போராளிகளின் ஊடுருவலால் ஒரு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அங்கு வசிப்போர் வாக்களிக்கும் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற “அச்சம்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்றவர் குறிப்பிட்டார்.

TAGS: