பிலிப்பின்ஸ் தனது பிரஜைகளை பிரதிநிதிக்க சிவநாதனை நியமிக்கிறது

sivaயாங் டி பெர்துவான் அகோங்கிற்கு எதிராக போர் தொடுத்ததாகவும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகவும் தவாவ்  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 பிலிப்பின்ஸ் பிரஜைகளைப் பிரதிநிதிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் முதுநிலை வழக்குரைஞர் என் சிவநாதனை நியமித்துள்ளது.

அந்தத் தகவலை பெர்னாமா தொடர்பு கொண்ட போது சிவநாதன் உறுதி செய்தார். கோத்தா கினாபாலுவில்  உள்ள வழக்குரைஞர் ஜேம்ஸ் சாய், குற்றம் சாட்டப்பட்டவர்களை தாம் துணை அடிப்படையில் பிரதிநிதிக்க
அனுமதிக்கப்படுவதற்காக உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்து கொள்வார் என்றும் அவர் சொன்னார்.  அந்த வழக்கு ஏப்ரல் 12ம் தேதி தாக்கல் செய்யப்படும்.

Ops Daulat-ன் போது போலீஸ் தடுத்து வைத்துள்ள மற்ற பிலிப்பின்ஸ் குடிமக்களையும் 47 வயதான
சிவநாதனும் ஜேம்ஸ் சாய்-ம் பிரதிநிதிப்பார்கள்.

தி ஹேக்-கில் இயங்கும் அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர் பட்டியலில் சேர்க்கப்பட்ட  முதலாவது மலேசியர் சிவநாதன் ஆவார். அவர் அனைத்துலக கிரிமினல் வழக்குரைஞர் மன்றத்தின் உதவித்  தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.

லஹாட் டத்து ஊடுருவல் தொடர்பில் மார்ச் 16ம் தேதி இதுவரை 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் தேதி மேலும் எழுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதே நீதிமன்றத்தில் ஏப்ரல் முதல் தேதி, பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை
வேண்டுமென்றே மறைத்ததாக போலீஸ் கார்ப்பரல் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.