ஜோகூர், ஆயர் ஹித்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு உள்ளூர் கட்சித் தலைவர் ஒருவருக்குப் பதில் பாஸ் ஆதரவாளர் மன்றத் தலைவர் ஹு பாங் சியூ தெரிவு செய்யப்படலாம் என்ற தகவல் அந்தத் தொகுதிக்கான நடப்பு எம்பி வீ கா சியோங்-கிற்கு ‘வருத்தத்தை’ அளித்துள்ளது.
“உள்ளூர் கட்சித் தலைவர்கள் ஒரிரு ஆண்டுகள் உழைத்துள்ளனர். ஆனால் திடீரென கிளந்தானைச் சேர்ந்த ஒருவர் அங்கு வேட்பாளராக நிறுத்தப்படுவதை அவர்கள் காண்கின்றனர். உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?” என அவர் வினவினார்.
சிறந்த தேர்ச்சிகளைப் பெற்ற பள்ளிக்கூடங்களுக்கு விருதுகளை வழங்கிய பின்னர் வீ நிருபர்களிடம் பேசினார்.
அதனால் தாங்களும் வருத்தமடைந்துள்ளதாக உள்ளூர் பாஸ் தலைவர்கள் தம்மிடம் கூறியதாகவும் பராமரிப்பு அரசாங்கத்தின் கல்வித் துணை அமைச்சருமான அவர் கூறிக் கொண்டார்.
அவர்கள் தமது தொகுதி வாக்காளர்கள் என்பதால் அவர்களையும் தாம் ‘கவனித்துக் கொள்ளப் போவதாக’ வீ
மேலும் சொன்னார்.