ராயிஸ்: பிரச்சாரத்துக்கு அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்துவது சரியானதே

raisபிரச்சார நோக்கங்களுக்கு தகவல் துறை எந்திரத்தை பயன்படுத்தும் பிஎன் நடவடிக்கைகளை தகவல், தொடர்பு,  பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

வேட்பாளர் நியமன நாள் வரையில் பிஎன் பராமரிப்பு அரசாங்கமாகக் கருதப்படுவதால் அது அரசாங்க
எந்திரத்தைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என அவர் சொன்னார்.

“நாங்கள் இப்போது தற்காலிக அரசாங்கம் என்ற முறையில் கடமைகளைச் செய்து வருகிறோம். கூட்டரசு
அரசமைப்பின் 43வது பிரிவின் கீழ் அரசாங்கம் இன்னும் இயங்குகிறது. அமைச்சர்களை நியமிப்பதற்கான
அதிகாரங்கள்  உட்பட நிர்வாக அதிகாரங்களை வரையறுக்கும்  பிரிவு 38ம் பிரிவு 43ம் அதில் சம்பந்தப்பட்டுள்ளன. எல்லா அமைச்சுக்களும் வழக்கமான நடைமுறைகளுக்கு இணங்க இயங்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்,” என அவர் மேலும் சொன்னார்.

“என்றாலும் வேட்பாளர் நியமன நாளுக்கு பின்னர் எந்த அரசாங்க அமைப்பும் எந்த ஒரு கட்சியின் தேர்தல்
பிரச்சாரத்திற்கு உதவி செய்யும் நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது.”info

அரசாங்கத்தின் சார்பில் தகவல் துறை அல்லது அறிவியல் துறை விளக்கம் தர முடியவில்லை எனக் கூறுவது  தவறாகும் என்றும் ராயிஸ் சொன்னார்.

நாடு ‘இடைக்கால அரசாங்கத்தின்’ கீழ் இருந்து வந்தாலும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றார்  அவர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பத்து நாடாளுமன்றத் தொகுதிக்கான பிஎன் தேர்தல் தளபத்திய மய்யத் திறப்பு விழாவுக்கு தகவல் துறையைச் சார்ந்த மூன்று வாகனங்கள் உதவி செய்ததாக மலேசியாகினி அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

 

TAGS: