உங்கள் கருத்து : ‘வேலையுடன் தொடர்பு இல்லாத நோக்கங்களுக்கு தகவல் துறை வாகனங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எப்படி அந்தத் துறையின் தலைமை இயக்குநர் அனுமதித்தார் ?’
பிஎன் பத்து நடவடிக்கை மய்யத் திறப்பு விழாவில் தகவல் துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன
கூனிங்: அது பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் ரசாக்-காக இருந்தாலும் பராமரிப்பு அரசாங்கத் துணைப் பிரதமர் முஹைடின் யாசினாக இருந்தாலும் அரசு வளங்களை, சாதனங்களை தங்கள் அரசியல் கட்சிக்கு பிரச்சாரம் செய்யப் பயன்படுத்துவது தவறாகும்.
தங்களது அதிகாரத்துவக் கடமைகளில் ஒரு பகுதியாக இருக்கும் நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொள்வது வேறு விஷயம். ஆனால் பராமரிப்பு அரசாங்கமாக இருக்கும் போது தங்கள் கட்சிக்கு ஆதரவு தேட அதிகாரத்துவ மேடையை அவர்கள் பயன்படுத்துவது இன்னொரு விஷயமாகும்.
பொது நிதியில் இயங்கும் அத்தகைய வசதிகள் அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தப் படுவதைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் போலீஸ், ஊழல் தடுப்பு நிறுவனம், அரசாங்க ஊழியர்கள் ஆகிய தரப்புக்களுக்கு இல்லாததால் பிஎன் அதனை காலம் காலமாகத் தொடருகின்றது.
இது நிற்க வேண்டும். நஜிப், முஹைடின் போன்ற அரசியல்வாதிகள் சட்டத்துக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்.
ஹும்ம்ம்ம்ம்ம்ம்: வேலையுடன் தொடர்பு இல்லாத நோக்கங்களுக்கு தகவல் துறை வாகனங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எப்படி அந்தத் துறையின் தலைமை இயக்குநர் அனுமதித்தார் ? அது அவசியம் விசாரிக்கப்பட வேண்டும்.
பத்து தொகுதியிலும் மற்ற இடங்களிலும் அந்த விவகாரத்தை தேர்தல் பிரச்னையாக்குங்கள். அத்தகைய அத்துமீறல்களைக் கண்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர். அது பிரச்னையாக்கப்பட்டால் அவர்கள் அதனை உணர முடியும்.
பி தேவ் ஆனந்த் பிள்ளை: கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் மாறவே இல்லை. பழைய நிலையை மீண்டும் கொண்டு வர அவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர். இரு கூட்டணி அரசியல் முறை தழைப்பதைக் காண அவர்கள் விரும்பவில்லை.
எச்ஒய்எல்: சுஹாய்மி யாஹ்யா அதிர்ஷ்டசாலி. காரணம் யாரும் அவரை நொறுக்கவில்லை. தேர்தல் நாளன்று அவரையும் அவரது கும்பலையும் வாக்காளர்கள் நொறுக்குவர்.
அவர் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. விரைவில் புதிய அரசாங்கம் தகவல் துறையையும் மற்ற அரசுத் துறைகளையும் அந்த விவகாரங்கள் மீது விசாரிக்கப் போகிறது.
ஐசேஞ்ச்: பிஎன் -னை எப்படி நம்புவது ? அரசாங்கச் சாதனங்கள் பிஎன் -னுக்குச் சாதகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது இது மட்டும் ஒரே ஒரு சம்பவம் அல்ல.
பினாங்கு பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் அதிகாரத்துவ கார்களைத் திரும்ப ஒப்படைத்ததின் மூலம் நல்ல எடுத்துக்காட்டை வழங்கியுள்ளது. மற்ற பிஎன் மாநிலங்களில் அது நிகழுமா ?
979899: மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் பொது வசதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எவ்வளவு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டாலும் ‘தடித்த தோலைக் கொண்ட’பிஎன் தலைவர்கள் அவற்றை அலட்சியம் செய்வார்கள்.
அடையாளம் இல்லாதவன்#19098644: இந்தியாவில் பொதுத் தேர்தலின் போது அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை நீதிமன்றம் நீக்கியது.
ஆனால் மலேசியாவில் சரவாக் முதலமைச்சர், ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் குறும்புத்தனமாக நடந்து கொள்வதாகத் துணிச்சலுடன் சொல்லி ஒத்துழைக்க முடியாது என்கிறார்.
ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்: பிஎன் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தும் வேளையில் ஊழல் இல்லாத அரசாங்கத்தை அளிப்பதாக வாக்குறுதி அளித்து வாக்குகளுக்குப் பிரச்சாரம் செய்கின்றது. என்ன வினோதம் ?
என்ன நடக்கிறது: மலேசியாகினிக்கு பாராட்டுக்கள். இது போன்ற விஷயங்களை அது நிறைய அம்பலப்படுத்த வேண்டும்.