13வது பொதுத் தேர்தலின்போது அரசியல் வன்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், பிஎன்- ஆதரவாளர்களாக இருந்தாலும்கூட, அதிகாரிகள் விட மாட்டார்கள்.
“அவர்கள் பிஎன் ஆதரவாளர்களாக இருந்தால்கூட நடவடிக்கை எடுப்போம். தப்புக்குத் தப்பு சரியாகிவிடாது”, என்று பராமரிப்பு அரசாங்கத்தின் சட்ட விவகார அமைச்சரான முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
அமைதியை நிலைநிறுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் சட்டங்களை அமல்படுத்துவது அவசியமாகும்.
“செயலாக்கமின்றி சட்டங்களினால் பயனில்லை”, என்றாரவர்.