ஏவுகணை (ராக்கெட்) சந்திரனை எட்டி விட்டது

pakat“அந்த ஆர்ஒஎஸ் நடவடிக்கைகள் பக்காத்தான் பிணைப்புக்களையே மேலும் வலுப்படுத்தும். இன்னும் முடிவு  செய்யாதவர்கள் அம்னோ/பிஎன் எந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்ளும் என்பதை உணருவர்”

ஆர்ஒஎஸ் கடிதம் லிம் கிட் சியாங்-கை கண்ணீர் சிந்த வைத்தது.

வேட்டைக்காரன்: பாஸ் குடையின் கீழ் டிஏபி போட்டியிடுவது உண்மையில் மோசமான விஷயமல்ல. அது  டிஏபி-க்கும் பாஸ் கட்சிக்கு வெற்றி-வெற்றி சூழ்நிலையாக இருக்கும், சங்கப்பதிவதிகாரிக்கும் (ஆர்ஒஎஸ்) பிஎன்  -னுக்கும் அது இழப்பு-இழப்பு சூழ்நிலையாக இருக்கும்.

எதிர்க்கட்சிகள் மீது பிஎன் மேற்கொள்ளும் தன்மூப்பான தீய நடவடிக்கைகளை உணர்ந்து மக்கள் எழுச்சி பெறுவர். முஸ்லிம் அல்லாதாரும் பாஸ் கட்சியை ஏற்கத் தொடங்குவர்.

மக்களும் தேர்தல் ஆணையத்தின் கட்சி சார்புடைய நடவடிக்கைகள் மீதும் ஆர்ஒஎஸ்-ஸின் நேர்மையற்ற நடவடிக்கைகள் மீதும் வெறுப்படைந்து விட்டனர்.

பெர்ட் தான்: டிஏபி அதிக இடங்களை பிடிக்கிறதோ இல்லையோ பாஸ் கட்சிக்கு முன்பு வாக்களிக்காத பல பழமைப் போக்குடைய டிஏபி சீனர்கள் இந்த முறை நிச்சயம் பாஸ் கட்சிக்கு வாக்களிப்பர். பாஸ் கட்சி குறித்த அச்சம் முற்றாக நீங்கி விடும்.

இந்த முறை அரசாங்கத்தை பக்காத்தான் அமைக்க முடியாமல் போனாலும் அடுத்த முறை பாஸ் அதனைச் செய்ய முடியும். ஏனெனில் பாஸ் சின்னம் சீனர்களுக்கு பழக்கமாகி விடும். பிஎன் அந்த ஆபத்தை எதிர்கொள்ளுமா ?

அதே போன்று சீன டிஏபி மீது அச்சம் கொண்டுள்ள பழமைப் போக்குடைய, முன்பு மலாய்க்காரர் அல்லாத வேட்பாளருக்கு வாக்களிக்காத பாஸ் மலாய்க்காரர்கள் இந்த முறை டிஏபி-க்கு வாக்களிப்பர்.

டிஏபி குறித்த அச்சமும் அகலும். இது குறித்து டிஏபி சிந்திப்பது நல்லது. ஆர்ஒஎஸ் செய்யும் காரியங்களின் விளைவுகளை எதிர்கொள்ள பிஎன் தயாராக வேண்டும்.

விசுவாசி: நெருக்கடி நேரத்தில் அதனை தங்களுக்கு கூடினபட்சம் நன்மையைத் தரும் அளவுக்கு எப்படி பயன்படுத்திக் கொள்வது டிஏபி-க்குத் தெரிந்துள்ளது. தீவகற்ப மலேசியாவில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதாரும் பாஸ் கட்சியை நன்கு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

என்ன நடக்கிறது: தேர்தல் ஆணைய அங்கீகாரத்துடன் நடத்தப்படும் மோசடியே மிகவும் மோசமானது. இப்போது டிஏபி மீது ஆர்ஒஎஸ் நடவடிக்கை.

பக்காத்தான் ராக்யாட் பதிவு செய்யப்படுவதை அது தாமதித்துள்ளது. இப்போது இந்த நடவடிக்கை. சின்னத் துரும்பு கிடைத்தாலும் போது அது நடவடிக்கை எடுக்கின்றது.

மஹாஷித்லா: அந்த ஆர்ஒஎஸ் நடவடிக்கைகள் பக்காத்தான் பிணைப்புக்களையே மேலும் வலுப்படுத்தும். இன்னும் முடிவு செய்யாதவர்கள் அம்னோ/பிஎன் எந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்ளும் என்பதை உணருவர்.

நெகாராக்கூ: நான் இன்னும் முடிவு செய்யவில்லை. பிஎன் -னுக்கு வாக்களிக்கக் கூடும். ஆனால் இந்த கறை படிந்த தந்திரத்தைப் பார்த்ததும் இந்த முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நான் முடிவு செய்து விட்டேன். டிஏபி கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம். அது சந்திரனாக இருந்தாலும் சரி கண்ணாக இருந்தாலும் சரி.

 

TAGS: