சுங்கை ஆச்சேயில் பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் போட்டியில் இறங்கியுள்ளது ‘துரதிர்ஷ்டமானது’ என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார்.
விரைவில் அந்த விவகாரம் தீர்க்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க பொதுத் தேர்தலுக்குப் பின்னர் டிஏபி, பாஸ், பிகேஆர் தலைவர்கள் சந்திப்பார்கள்.
“வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. ஒருவர் மீட்டுக் கொண்டால் கூட வாக்குச் சீட்டுக்களில்
அவரது பெயர் இருக்கும். அது குழப்பத்தை ஏற்படுத்தும்,” என கர்பால் இன்று பினாங்கில் நிருபர்களிடம்
கூறினார்.
சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியில் அம்னோவின் மாஹ்முட் ஸாக்காரியாவுக்கு எதிராக பிகேஆர்
கட்சியின் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரினும் பாஸ் கட்சியின் யூஸ்னி மாட் பியாவும் நிற்பது பற்றி அவர்
கருத்துரைத்தார்.
அந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக நாளை பாஸ், பிகேஆர் தலைவர்கள் சந்திக்கின்றனர்.